அமெரிக்காவிலே ஒரு சபையிலே மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகையில், அந்த தேசத்தான் ஒருவன் இவரை நோக்கி "இவ்விதமான கொள்கையிலிருந்தது. பற்றியே உங்கள் தேசத்தை அன்னியர் வென்று கைப்பற்றிக்கொள்ள நீங்கள் தோற்றுக் கிடக்கிறீர்கள்" என்றான். "நாங்கள் இப்பொழுது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும், எங்கள் பூமி புண்யபூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வ சாபம் இருக்கிறது" என்று ரவீந்திர தாகூர் அவனுக்கு மறுமொழி சொன்னாராம்.அதாவது, இந்த நிமிஷத்தில் செல்வத்திலும் பெருமையிலும் நம்மைக் காட்டிலும் அமெரிக்க தேசத்தார் உயர்வு பெற்றிருந்த போதிலும், இந்த நிலைமை எப்போதும் மாறாமலிருக்கும் என்று அமெரிக்கா நினைப்பது பிழை. நாங்கள் தெய்வத்தையும்தர்மத்தையும் நம்பி யிருக்கிறோம். கீழே விழுந்தாலும் மறுபடி " எழுந்து விடுவோம். அமெரிக்கா விழுந்தால் அதோகதி, ஆதலால், இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து, உலகமுழுதிலும் எல்லா தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் ஸமான மென்றும் தெரிந்துகொண்டு, பரஸ்பரம் அன்புசெலுத்தினால் பிழைக்கலாம்' என்று ரவீந்தரர் அவர்களுக்குத் தர்மோப தேசம் செய்கிறார். வெளி தேசத்தாருக்கு தர்மோபதேசம் செய்கையில், நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா? இங்கே, அனாவசியமான ஜாதி விரோதங்களும் அன்புக் குறைவுகளும் அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன்பிறப்பையும் நிலைநாட்டுவது நம்முடைய கடமையன்றோ? எது எப்படியானாலும், இந்த தினத்தில் இந்த க்ஷணத்தில் நாமெல்லோரும் பறையர், பார்ப்பார் எல்லோரும், ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்குஅதிகாரிகள் தயவு செய்யவேண்டிய விஷயம் என்ன வென்றால்:- எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டு பிரதி நிதிகள் குறிக்கவேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்த தொரு மகாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மகாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேய ஸாம்ராஜ்யத்தை விட்டு விலகவேண்டும் என்ற யோஜனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேண்டும். |