பக்கம் எண் :

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

இந்தியா முழுதிலுமுள்ள ஹிந்துக்களின்அனுகூலத்திற்குப் பாடுபட்டு வரும் ''அகண்ட பாரதஹிந்து சபை''யின் காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர்தேராதூன் பட்டணத்திலிருந்து ''ஹிந்து'' பத்திரிகைக்குஎழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறுசொல்லுகிறார்:-

'இந்த மாதம் முதல் தேதி, சென்னைத்தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும்குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துமதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்தவிஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து"வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தைவிளைவிக்கத் தக்கது.''

ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான்அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள்குறைவுபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல,வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம்இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள்; ஜனத் தொகைகுறையும்போது பார்த்துக்கொண்டே சும்மா இருப்போர்விழித்திருக்கும்போதே தூங்குகிறார்கள்; அவர்கள்கண்ணிருந்தும் குருடர்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்துசபையின் காரியதரிசி ஸ்ரீீ ரத்னசாமு என்பவருக்கு ஸ்ரீ காசிஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ஸ்ரீமான் பகவான்தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோசனைசொல்லுகிறார்: 'பறையர்களுடைய தீண்டாமையை உடனேநீக்கி விடவேண்டும். காசி, நவத்வீபம், பிருந்தாவனம் என்றஸ்தலங்களிலுள்ள பண்டிதர்களும் சங்கரமடத் தார்களும்மற்றுமுள்ள மடதிபதிகள் முதலியவர்களும் இவ்விஷயமாக"உடனே உத்தரவு கொடுக்கவேண்டும்.?

பஞ்சமருடன் பந்தி போஜனம் செய்யவேண்டும்மென்றாவது சம்பந்தங்கள் செய்யவேண்டும் மென்றாவது,மேற்படி ரத்னசாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை.ஹிந்துக்களுக்கு இதர வகுப்பினர் பந்தி போஜனம், சம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை பஞ்சமரும் அப்படியேஇருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார். ஆனால்பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிகள் பள்ளிக்கூடங்கள்முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும்கடமை யாரைச்சேர்ந்தது? அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன்ஆளனுப்பவில்லை? ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாகஅறிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடூரமானகஷ்ட நிஷ்டூரங்கள் நேரிட்டாலும் இந்த தர்மத்தைக்கைவிடமாட்டார்கள். உலகத்தில் நிகரற்றதாகிய வறுமையானதுநமது தேசத்தை வந்து பிடித்துக் கொண்ட கால முதலாக நமதுநாட்டார் பசியாலும் அதனாலேற்படும் நோய்களாலும்லக்ஷக்கணக்காக அகால மரணதுக் கிரையாகி வருகிறார்கள்.பசித் துன்பம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும், கீழ்வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம்நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச்"சாகிறார்கள். பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும்,நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம்போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள்சற்றே மறந்து போய் விட்டதாகத் தோன்கிறது.