பக்கம் எண் :

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

''அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்       ஆவுரிதுத் தின்றுழலும் புலையரேனும்       கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராயின்       அவர் கண்டீயாம் வணங்குங் கடவுளாரே''

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோர்"அதன் பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை.

'ஒக்கத் தொழுகிற்றிராயின் கலியுகம் ஒன்றுமில்லை'என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதிக்கின்றார்கள்.ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள்மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் நாம் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய் விடமாட்டோம்.ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும்பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள்புண்படும்; இருந்தாலும் நமக்கு ஸர்வ நாசம் ஏற்படாது. ஹிந்துதர்மத்தை கவனியாமல், அசிரத்தையாக இருப்போமானால்நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்; அதில்சந்தேமில்லை.

ஹிந்து மதம் ஒன்று, சைவம் வைஷ்ணவம் முதலியஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்துஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்"கொண்டிருக்கிறார்கள். ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலியசிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

'திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்       செய்கை கொடுமுளற அறிவரார்?       ஆறு சமயங்கடொறும் வேறு வேறாகி       விளையாடும் உனையாவரறிவார்?'

என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்துமகா ஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையைநன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள். பிரம்ம,க்ஷத்ரிய, வைசிய,சூத்ர - என்ற நான்குபிரிவிலும் பெரும்பகுதியோர் எல்லாத்தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்குகிறார்கள்,வேதரிஷிகளைப்போலே.

ஆனால் சைவ வைஷ்ணவ மடங்களிலும்பௌராணிகர் கூட்டத்திலும் பரஸ்பரமாகியமதகண்டனைகள் கொஞ்சம் நடந்து வருகின்றன. அதைஉடனே நிறுத்தவேண்டும்.