பக்கம் எண் :

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

ஹிந்துக்கள் யார்?

வேதத்தை நம்புவோர்.

ருத்ரன், நாராயணன், குமாரன் முதலியதேவர்கள் ரிஷிகளால் ஒன்றாகக் கருதி வணங்கப்பெற்றோர். ஒரே தெய்வத்தை இங்ஙனம் பல பெயர் கூறிவணங்கியதாக அந்த ரிஷிகளே சொல்லி யிருக்கிறார்கள்.

நல்ல காலம்

ஹிந்து மதம் ஒன்று. ஆகவே, வைஷ்ணவ"சமயாசாரியார், சைவ சமயாசாரியார். சங்கரமடத்தார் முதலியகுருக்களெல்லாம் தமது பிரதிநிதிகள் மூலமாக ஒன்று கூடியோசனை செய்து, ஹிந்துக்களுடைய ஜனத்தொகைகுறையாமல் பாதுகாப்பதற்கு வழி செய்யவேண்டும் ''பிறமதங்களிலிருந்து ஜனங்களை நமது கூட்டத்தில் சேர்த்துக்கொள்வதற்கு வழிகளென்ன, என்பதைப்பற்றி யோசனைசெய்ய வேண்டும். தெய்வம் ஹிந்துக்கள் மீது கடைக்கண்செலுத்தி விட்டது; நாம் கும்பிடும் சிலைகளெல்லாம் வெறும்கல்லும் செம்புமல்ல. மனிதர்களாலே சீர்படுத்த முடியாதபடிஅத்தனை கெட்ட நிலைமையில் ஹிந்துக்கள் வீழ்ந்தசமயத்தில், மேற்படி தெய்வங்கள் காப்பாற்றக் கருதிமுற்பட்டு நிற்கின்றன. நமக்குள்ளே மஹா ஞானிகளும், சித்தபுருஷர்களும் அவதரித்து விளங்குகிறார்கள். ஹிந்துக்களுக்குநல்ல காலம் பிறந்துவிட்டது. இதனை எல்லொரும் தெரிந்துநடக்க வேண்டும்.

ஜாதிப் பிரிவு

காச்மீர ராஜ்யத்திலே ஹிந்து ராஜா; ஆனால்ஹிந்துக் குடிகளைக் காட்டிலும் முகம்மதியக் குடிகள்அதிகம். அந்த ராஜ்யத்து ஹிந்துக்களிலே ஒரு விசேஷம் "என்னவென்றால் அவர்களத்தனை பேரும் பிராம்மணர்;வேறு ஜாதியே கிடையாது. இமயமலைக் கருகேயுள்ளகாஸ்கரா ஜில்வாவில் பிராம்மணரைக் காட்டிலும் க்ஷத்திரியஜாதியாருக்கு மதிப்பு அதிகம். க்ஷத்திரியன் உயர்ந்த ஜாதி;பிராமணன் தணிந்த ஜாதி. திருநெல்வேலி ஜில்லாவில் ''கம்பளத்து நாயகர் என்ற ஜாதியைச் சேர்ந்த சிலஜமீன்தார்கள் இருந்தார்கள். இவர்கள் கலியாணத்திலேதாலி கட்டும்பொழுது பிராம்மணன் வரக்கூடாது. அவர்கள்ஜாதி புரோகிதர்கள் வந்து கலியாணத்திலே முக்கியச்சடங்கு நடத்த வேண்டும். அப்போது அரண்மனைக்குசமீபத்திலே ஒரு பிராம்மணன் வந்தால் அதுவேஅபசகுனம். அடித்துத் துரத்தி விடுவார்கள். ''ஜாதி பேதவினோதங்கள்'' என்று யாரேனும் புஸ்தகம் எழுதினால்நிறைய விலையாகும். சர்க்கார் அச்சிடும் (ஜனசங்கியை)புஸ்தகத்திலும் வட இந்தியா ஜாதிகளைப் பற்றி நெஸ்பீல்டு(Nesfield)  என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் புத்தகத்திலும்,பத்திரிகைகளிலும் அனுபவத்திலும் தெரியக்கூடியசெய்திகளை யெல்லாம் ஒன்றுசேர்த்து நல்ல தமிழ்ப்புஸ்தகம் போடலாம்; நிறையலாபம் கிடைக்கும். இந்தமாதிரியான புஸ்தகம் எழுதுவதற்கு வேண்டியசௌகரியங்கள் எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் வேறுயாரேனும் இந்தத்தொழில் செய்தால் நான் பத்துப் புஸ்தகம்விலைக்கு வாங்கிக்கொள்வேன்.