பக்கம் எண் :

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

ஆசாரச் சீர்திருத்தம்

இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகியஇடிப்பள்ளிக்கூடம் பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோகிதர்வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும்பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னார்:-''பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை.மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாகக்கேள்விப்பட்டேன். என்ன செய்யலாம்? ஐயோ பாவம்?கிழவி; அந்த அன்னி பெஸன்ட் வயது இவளுக்குமிருக்கும்.அதனாலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மம்"பண்ணிவைக்கக் கோவிலுக்கு வருவதே சந்தேகம். அவருடையமருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோவிலுக்குத்தான்போவேன். ராமராயர் உங்களைப்போல் உபாகர்ம உபநயனவிஷயங்களை வீட்டுக்குள்ளே ரஹஸ்யமாக நடத்திவருகிறாராகையால், அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப்பக்கமாக வருவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனேஅனுப்புகிறேன்? என்று சொன்னார். நான் அவரிடம்:- 'அதென்ன ஸ்வாமி? இந்த ப்ராம்மண ஸமூஹத்தில் வருஷந்தவறாமல் இன்றைக்கு ஆவணியவிட்டமா நாளை ஆவணியவிட்டாமா என்று சண்டை நியதமாகவேநடந்துகொண்டு வருகிறதே, காரணமென்ன?' என்று கேட்டேன். அவர் சொன்னார்:- 'இந்துக்களிலே பத்தாயிரத்தில்ஒன்பதாயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர்அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுதும் தப்பிதம். உத்தராயணதக்ஷிணாயஹ்க் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான்;இருபத்திரண்டுக்கும் இருபத்து மூன்றுக்கும் நடுவிலே. அதாவது, பஞ்சாங்கம் பிரயோஜன மில்லை. நம்முடையவருஷ மாஸந் தேதியெல்லாம் தப்பிதம். இதைக் கவனிக்கநாதனைக் காணோம், ஆவணியவிட்டச் சண்டைநிர்த்தூளிப்படுகிறது. அஹோ! அபண்டிதா' என்றார்.'பத்திரிகைகளிலே நடக்கிறதே அதைத் தவிர இந்த உள்ளூர்ப்பண்டிதர்களுக்குள்ளே வேறே ''லடாயி''கள் உண்டோ?' "என்று கேட்டேன்.

'அதை என்ன சொல்வேன், போம்! அத்வைதசமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சிகுமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமைதான் பூணூல்போட்டுக்கொள்ள வேண்டுமென்ற கக்ஷி. மணிலாக் கொட்டைமஹாதேவ அய்யர் வெள்ளிக்கிழமை கக்ஷி. வெங்காயக் கடைவெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமிஅய்யரே திதி, நக்ஷத்திரம் எல்லாம்; யாராவது நம்மிடம் வந்துஇன்றைக்குத் திதி என்ன்வென்று கேட்டால் நாம்பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லுகிறேன் என்று சொல்வோமோ,மாட்டோமோ?  அந்த இடத்தில், அவர் முத்து ஸாமியைப்பார்த்து வந்து சொல்லுகிறேன் என்பார். அவர்கூட இந்தத்தடவை ஸர்க்கார் ரஜா ஆவணியவிட்டத்துக்காகவெள்ளிக்கிழமை தான் விடுகிறார்கள் என்பதையும் அவருடையமாப்பிள்ளை ஸர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும்,அவருக்கு வியாழக்கிழமை ரஜா கிடையாதா கையாலும்வெள்ளிக்கிழமை யன்று உபாகர்மம் நடத்தினால் தான்மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்த முடியும் என்பதையும்உத்தேசித்து, இந்த நிலைமையில் முத்துஸாமி அய்யரைக்காட்டிலும் கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானஞ்செய்துவிட்டார். ருஷியாவிலே குழப்பம் எப்படி இருக்கிறதுஸ்வாமி? 'என்று பிரமராயர் முடித்தார். 'அது எக்கேடும்கெட்டுப் போகிறது மேலே உபாகர்ம விஷயத்தைச்சொல்லும்' என்றேன்.