பக்கம் எண் :

சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்

இந்த சமயத்தில் கோயில் தர்மகர்த்தாவீரப்ப முதலியாரும் அங்கே வந்து சேர்ந்தார்.வந்தவர், என்னை நோக்கி இன்று கோவிலில் பிராமணஅட்டஹாஸம் அதிகமாக நடக்கும். நீங்கள் கோவிலிலேபூணூல் போட்டுக்கொள்ளுகிறீர்களா? வீட்டிலேதானா?''என்று கேட்டார். ''வீட்டில்'' என்றேன். ?கோயிலும் வீடும்ஒன்றுதானே?'' என்று பிரமராயர் ஸூக்ஷ்மார்த்தமாகக் கேட்டார். ''ஆம்'' என்றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்; ''பூணூலை எடுத்துப் போடுங்கள்; இந்தியாமுழுவதும் ஒரே ஜாதி, ஒரே உடுப்பு, ஒரே ஆசாரம்என்று செய்து விடவேண்டும்; அது வரை பிராம்மண"சபை, அப்ராம்மண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை,முதலியார் சபை - இந்த இழவெல்லாம் தீராது. ஒரேகூட்டம் என்று பேசு. பூணூலென்ன கீணூலென்ன, வீண்கதை!' என்றார். பிரமராயர் சமாதானப் படுத்தப்போனார்,வீரப்ப முதலியார் சொல்லுகிறார்: 'எல்லாம் தெரியும்.தெரியும். யாரோ ஒரு ராஜாவாம்; அவன் பூணூலை ஒருதட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப்பார்த்தானாம்; பூணூல் கீழே இழுத்ததாம்; பொன்மேலேபோய்விட்டதாம். இதெல்லாம் மூட்டை. சரி சமானமாகஐரோப்பியர்களைப் போலே நடப்போம். ஜப்பானிலேஅப்படித்தான். ஜாதி வித்யாசத்தை முதலாவது நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள்.ஜப்பானியரைப்போல இருப்போம்' என்றார்.

'ஹிந்துக்களைப்போலவே இருப்போம்' என்றுநான் சொன்னேன்.

'எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்கவேண்டுமென்பது உம்முடைய கக்ஷியோ?' என்று வீரப்பமுதலியார் கேட்டார். 'வேண்டியவர்கள் எல்லாம் பூணூல்போட்டுக்கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாகஅந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்கள்"எல்லாரும் பூணூல் போட்டுக்கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூணூல் இருந்தாலும் ஒன்றுபோலே,இல்லாவிட்டாலும் ஒன்றுபோலே, ஹிந்துக்களெல்லாம் ஒரேகுடும்பம். அன்பு காப்பாற்றும். அன்பே தாரகம்? என்றேன்.'அன்பே சிவம்' என்று பிரமராயர் சொன்னார். இவ்வளவுடன்காலை சபை கலைந்தது.