பக்கம் எண் :

சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடையமனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில்உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும்,சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடிஅறிவுடன் வாதங்கள்நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள்.அப்பால், அத் தீர்மானங்களை தமது சொந்த ஒழுக்கத்திலும்தேசஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரியமுயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவைஇவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள்நிறைவேறு வதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மைவிளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவைபிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமானகால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக் காணோமென்றால்,இந்த ஆசாரத்திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம்! இவ் வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்தசீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம்,ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, ''உண்மையிலேயேதாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா'' என்பதை நிச்சயித்துஅறிந்து கொள்ளவேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதியாகவந்திருப்போர் அத்தனை பேரிலும் பெரும் பகுதியார் ''இப்போதுஉடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னனென்னசீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்''என்பதைக் கண்டுபிடித்துப் பத்திரிகைகளில் வெளியிடவேண்டும்.

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்தவிஷயத்தில் சிரத்தையுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேரமுயற்சி செய்யவேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி மாதர்களின் சபையொன்றுநடக்கப்போகிறதாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ''தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு'' அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக்குறித்து அவரவர் பாடுபட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும்,நம் நாட்டு ஆண் மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக் கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையாளத்திறமையற் றோராகக் காணப்படுகிறார்களாதலால் நம்முடையஸ்திரீகளை மேன்மைப்படுத்துதற்குரிய காரியங்களை முற்றிலும்இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமேமுற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக்கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காகஉழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியைஅதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத்தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்குகவனிக்க வேண்டும்.