பக்கம் எண் :

சமூகம் - ஜாதிக் குழப்பம்

இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு.பணமில்லாதது ஒன்று. ஜாதிக் குழப்பம் இரண்டாவது.பணக்கஷ்டாமாவது வயிற்றுக்குப் போதியஆஹாரமில்லாத கொடுமை. இந்தத் துன்பத்துக்குமுக்கியமான நிவர்த்தியாதென்றால் நமது தேசத்தில்விளைந்து, உணவுக்குப் பயன்படக்கூடிய தான்யங்கள்வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தடுத்துவிடவேண்டும். இங்கிலாந்து முதலிய சில தேசங்களில்காலையில் எழுந்தால் ஆஹாரத்துக்கு மீன் தென்அமெரிக்காவிலிருந்து வரும்படியாக இருக்கும்;"வெண்ணெய் ஆஸ்டிரேலியாவிலிருந்து வரும்படியாகஇருக்கும். இந்நாட்டினரின் நிலைமை அப்படியில்லை.இங்கு பூமி நம்முடைய ஜனங்களுக்கெல்லாம் போதிய ஆஹாரம் கொடுக்கிறது. ஆதலால்,ஏற்கெனவே போதிய அளவு பணம் குவித்துவைத்திருந்தாலன்றி உணவுக்கு வழி கிடையாது என்றநிலைமை நம்முடைய தேசத்திற்கில்லை. உணவுத்தான்யங்களின் ஏற்றுமதியை எந்த நிமிஷத்தில் நிறுத்திவிடுகிறாமோ, அந்த நிமிஷம் முதல் நம்முடையஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமானஆஹாரம் கிடைத்துக்கொண்டு வரும். இந்தவிஷயத்தில் ஜயமடைய வேண்டினால் நம்முடையவியாபாரிகள் வெறுமே தம்முடைய வயிறு நிரப்புவதுமாத்திரம் குறியாகக் கொள்ளாமல் தமக்கும் லாபம்வரும்படியாகவும் பொது ஜனங்களுக்கும் கஷ்டம்ஏற்படாமலும் செய்தற்குரிய வியாபாரமுறைகளைக்கைக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்த வேண்டும்."இங்ஙனம் நம்முடைய நாட்டிலேயே தான்யங்களைநிறுத்திக்கொண்டு, அந்தந்த ஊரில் மிக எளியோராகஇருப்போரிடம் தக்க வேலைகள் வாங்கிக்கொண்டுஅவர்களுக்கு உணவு வேண்டிய மட்டும் கொடுத்துவர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது.

பூரி (ஜகந்நாதம்) பிரதேசங்களில் மிகவும்கொடிய பஞ்சம் இந்த க்ஷணத்தில் நடைபெற்று வருகிறது.நம் நாட்டில் ராஜாக்களும், சாஸ்திரிகளும், பெரியமிராசுதார்களும், ஸாஹூகார்களும், வியாபாரிகளும்,வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும், வயிறுகொழுக்க, விலாப்புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படிஆஹாரங்களைத் தம்முள் திணித்துக்கொண்டிருக்கையிலே, உலகத்தில் வேறெந்த நாட்டிலும்இல்லாதபடி இந்தியாவில்மட்டும், தீராத மாறாத பஞ்சம்"தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்கவழி தேடவேண்டிய யோசனை அவர்களுடையபுத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதைஎண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது.இத்தனை கஷ்டத்துக்கிடையே ஜாதிக்கொடுமை ஒருபுறத்தே தொல்லைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே அதிஏழைகளாக இருக்கிறார்களென்பது மறுக்க முடியாதவிஷயம். உழைப்பும் அவர்களுக்குத் தான் அதிகம்.அதிக உழைப்பு நடத்திவரும் வகுப்பினருக்குள்ளேஅதிக வலுவு ஏற்படும் அநீதி உலக முழுதிலுமிருக்கிறது.எனினும், நம்முடைய தேசத்தைப் போல் இத்தனைமோசமான நிலைமை வேறெங்குமில்லை.

இந்த ஊரில் (கடையத்தில்) ஒரு செல்வர்வீட்டு விசேஷமொன்றுக்காக சங்கரநயினார் கோயிலிலிருந்துகோவில் யானையை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.அது ஆண் யானை; 18 வயதுள்ள குட்டி. அது மிகவும்துஷ்டயானை யென்று பெயர் கேட்டிருப்பதால், அதைஇவ்வூரில் அனேக ஜனங்கள் திரள்திரளாகச் சென்றுபார்க்கிறார்கள். இன்று காலை நானும் என்நண்பரொருவருமாக இந்த யானையைப் பார்க்கச்சென்றோம். அந்த யானையைப் பற்றிய முக்கிய விசேஷம்யாதெனில், இதற்கு மாவுத்தர்களாக இரண்டு பிராமணப்பிள்ளைகளும், சைவ ஓதுவார் (குருக்கள்) வம்சத்தைச்சேர்ந்த ஒருவரும் வேலை பார்க்கிறார்கள். ஸாதாரணமாக,மாவுத்தர் வேலை செய்ய மஹம்மதியர்களும்ஹிந்துக்களில் தணிந்த ஜாதியாருமே ஏற்படுவது வழக்கம்.இந்த யானைக்கு பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்கள்.