மேற்படி பிராமண மாவுத்தரில் ஒருவனிடம்நான் இந்த யானையின் குணங்களைப் பற்றிப்பேசிக்கொண்டிருந்தேன். நான் நதிக்குப் போய்க்கொண்டிருக்கையில் அவன் அந்த யானையைநிஷ்கருணையாக அடித்துக்கொண்டிருக்க நான்பார்த்தேனாதலால், அதை அவனுக்கு நினைப்பு மூட்டி''மிருகங்களை அன்பினால் பழக்கவேண்டும்.கருணையில்லாமல் அடித்துப்பழக்குவது சரியில்லை''என்றேன். நான் இந்த வார்த்தை சொன்னது தான்தாமஸம், அவன் மிகவும் நீளமாகத் தன் ஸாஸ்திரக்கட்டுகளை யெல்லாம் அவிழ்த்து விரிக்கத் தொடங்கிவிட்டான். அந்த மாவுத்தன் சொல்லுகிறான்:- ''இந்தயானை கீழ் ஜாதி யானை; யானைகளில் ப்ரம்ம,"க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு முக்கியஜாதிகளுண்டு. ஒவ்வொரு ஜாதியிலும் கிளைவகுப்புக்களிருக்கின்றன. அவற்றுள் இது சூத்திரஜாதியைச் சேர்ந்த யானை. மனிதர்களில்சூத்திரர்களுக்குள்ளே ஈழுவர் என்ற ஜாதியர்இருக்கிறார்களே, அதே மாதிரி இந்த யானை ''வீரன்''வகுப்பைச் சேர்ந்தது........' இங்ஙனம் அந்த மாவுத்தன் நீண்ட கதைசொன்னான். நான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச்சொல்லியதின் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனதில்இந்த ஜாதிக்கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறதுஎன்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையைஎடுத்தால், அதில் ப்ரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்!குதிரையிலும் அப்படியே! வானத்திலுள்ள கிரஹங்களிலும்அதே மாதிரி ப்ரம்ம க்ஷத்திரிய முதலிய ஜாதி பேதங்கள்.இரத்தினங்களிலும் அப்படியே! இங்ஙனம் ஜாதிக்கொள்கை வேரூன்றிக் கிடக்கும்நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்வம், ஸஹோதரத்வம்"என்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அதுஸாதாரண வேலையா ? கொஞ்ச ஜாதியா ? அவற்றில்உட்பிரிவுகள் கொஞ்சமா ? பறை பதினெட்டாம்! நுளைநூற்றெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதிகளும்,நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும்,பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறுஜாதிகள்; ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் கிடையாது. பெண்கொடுக்கல், வாங்கல் கிடையாது. கேலி; கேலி; பெருங்கேலி.இங்ஙனம் ஏற்கெனவே மலிந்து கிடக்கும் பிரிவுகள்போதாவென்று புதிய புதிய பிரிவுகள் நாள்தோறும் ஏற்பட்டுவருகின்றன. சீர்திருத்தம் வேண்டுமென்ற நல்லநோக்கமுடையவர்களிலே சிலர் செய்கை நெறியுணராமல் புதியவகுப்புக்கள் ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். கடையத்துவேளாளரில் இங்கிலீஷ் படித்த சிலர் தாங்கள் 'திராவிடப் பிராமணர்' என்று பெயர் வைத்துக்கொண்டு பரம்பரையாக வந்த 'பிள்ளை'ப் பட்டத்தை நீக்கி 'ராயர்' பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். திருஷ்டாந்தமாக ஒருவருக்கு'ஆண்டியாப் பிள்ளை' என்ற பெயர் இருந்தால், அவர் அதைஸர்க்கார் மூலமாக 'ஆண்டியப்பராயர்' என்று மாற்றிஅப்படியே ஸகல விவகாரங்களும் நடத்துகிறார். இந்ததிராவிடப் பிராமணரின் பட்டம் எப்படி நேரிட்டது என்பதைக்கண்டுபிடிக்க வழியில்லை. |