பக்கம் எண் :

சமூகம் - மதிப்பு

நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன்என்று தீர்மானம் செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமைஏற்படுகிறது. அங்ஙனம் தீர்மானிக்கப்பட்ட நாயகர்கள்பத்துப்பேர் சேர்ந்து தமக்குள்ளே ஒரு தலைவனைநியமித்துக் கொண்டால், அந்தத் தலைவனுடையசொல்லை தேசத்தார் அனைவரும் மதிக்கும்படிநேரிடும்.

கூட்டத்திற்கு வலிமையுண்டு. இதுஹிந்துக்களுக்குக் கூடத் தெரிந்த விஷயம.் ஒரு பெரியகூட்டத்தின் தலைவனுக்கு மதிப்புண்டு என்பதைஹிந்துக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். என்றாலும்,புதிது புதிதாகக் கூட்டம் சேர்க்கும் யுக்தி ஹிந்துக்களுக்கு"இன்னும் நன்றாகத் தெரியவில்லை. ஒரு பெரியகூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதியவலிமையும் அதனால் புதிய அனுகூலங்களும்பெறுகின்றான். பிச்சைக்காரர் கூடத் தனித்தனியேபிச்சையெடுப்பதைக் காட்டிலும் நூறுபேர் கூட்டங்கூடிப்பிச்சைக்குப் போனால் அதற்கு மதிப்பு மிகுதியுண்டு.

ஹிந்துக்களை உலகத்தார் பாமர அநாகரீகமுக்காற்காட்டு ஜனங்கள் என்று நினைக்கும்படி நாம்இதுவரை இடங்கொடுத்து விட்டோம்.

இந்தியாவை வெளி யுலகத்தார் பாமர தேசம்என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது.புறக்கருவிகள் பல.

முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும்ஐரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மதவிஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துபெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய்"மஹத்தான அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்துமதத்திலே சேர்த்து மேன்மைபடுத்தும் புண்ணியத்தைச்செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளைநதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்திரீகளை (முக்கியமாக,அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும்கைம்பெண்களை) நாய்களைப்போல நடத்துகிறார்கள் என்றும்பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடையஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்காண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப்பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

இரண்டாவது, அந்நிய தேசப் பண்டிதர்சரித்திரக்காரர் முதலானவர்கள். ஹிந்துக்களை அன்னியதேசத்தார் போர் செய்யும் தந்திரத்தாலும் வென்றுஹிந்துக்களின் மீது அன்னிய ராஜ்யம் நடைபெற்றுவருவதை யொட்டி, வெளிதேசத்துச் சரித்திரக்காரர் நமதுநாட்டு வீரம் ஒற்றுமை முதலிய குணங்களையும் நமதுபொது அறிவையும் மிகவும் இழந்த நிலைமையிலேஇருப்பதாகக் காட்டுதல் வழக்கமாக நடைபெற்றுவந்திருக்கிறது.

நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப்படுத்திமதிப்பில்லாமல் செய்துவிட்ட புறக்கருவிகள் பல. அவற்றைவிரிவாக எழுத வேண்டுமானால் தனிப் புத்தகம் போடவேண்டும்.