பக்கம் எண் :

சமூகம் - மதிப்பு

''போனது போகட்டும், இனிமேலாயினும்புத்தியாய் பிழை மனமே" என்று ஒரு பண்டாரப்பாட்டுஉண்டு. அது போலே, நடந்ததெல்லாம் நடந்து போய்விட்டது.இனிமேலாயினும், ஹிந்துக்கள் தம்மை மதிப்புடையோராகச்செய்துகொள்ள வழிதேட வேண்டும். வெளி தேசங்களில்நமக்கு மதிப்பு உண்டாக்க வேண்டுமானால், அதற்கு மூலம்இங்கே வலிமை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இங்ஙனம்வலிமை சேகரிப்பதற்கு கூட்டம் ஒன்றே உபாயம் என்பதைஇந்த வியாசத்தின் தொடக்கத்திலே சொன்னோம். நம்முடையராஜரீக நிலைமையைச் சீர்திருத்துவதற்குப் பல முயற்சிகள்நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள் மேன்மேலும் வளர்ந்து"வெற்றிபெற வேண்டுமானால், அதற்குக் கூட்டங்களைஅதிகப்படுத்துவதே வழி. கூட்டங்கள் கூடி யோசனைபண்ணுகிற விஷயம் கைகூடும். ஓயாமல் கூட்டங்கள் சேர்த்துதிரும்பத் திரும்ப உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாகக்கைகூடும். நமது ராஜாங்கக் கூட்டங்களில் இதுவரைசரியானபடி சக்தி ஏற்படாத காரணம் யாதெனில், இந்தக்கூட்டங்களில் உண்மையாகவே தேசத்துக்கு அனுகூலம் செய்யவேண்டும் என்ற கருத்துடையவர்கள் மிகச் சிலராகவேஇருந்தனர். தேச பாஷைகளிலே பேசுவது கிடையாது.அதாவது, பொய் அதிகப்பட்டுத் தலைதூக்கி நின்றது. இப்போதுநாட்டில் உண்மையான தேசாபிமானிகள் தொகைஅதிகப்பட்டிருக்கிறது. தேச பாஷைப் பேச்சு வழக்கப்பட்டுவருகிறது. ராஜ்ய விஷயங்களுக்கு மாத்திரம் நான் பேசவில்லை.நான் பொதுப்படையாகச் சொல்லுகிறேன். எவ்விதமானவலிமைக்கும் கூட்டம் ஆதாரம். சபை சேர்ந்து பேசினால்மாத்திரம் போதாது. எப்போதுமே எங்கும் நம்மில்ஒவ்வொருவரும் நாம் இன்ன பெருங்கூட்டத்தைச்சேர்த்திருக்கிறோம் என்பதையும் நமது வாழ்க்கையின்நோக்கம் இன்னதென்பதையும் மறவாதிருக்க வழி தேடவேண்டும்.

இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பியதேசங்களில், கோடானு கோடியாக மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு"உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுதுமே ஒரு ஸைன்யம்போல ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சிலதலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை,ஸமாதானக்காரன் இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரேகூட்டமாகச் செய்து, சண்டைக்கன்று, ஸமாதானமாக மனிதன்ஸாதனை செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றும்பொருட்டாக, உபயோகப்படுத்த வேண்டுமென்பது என்னுடையநோக்கம்:

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மற்றஹிந்துக்களின் உதவி வேண்டும். தெய்வபலம் வேண்டும்.இவ்விரண்டும் கைகூடும்.

இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம்போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன்ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனைமேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன்.ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிடவேண்டும் இதற்குரிய உபாயங்களை சரியான காலத்தில்தெரிவிக்கிறேன்.