பக்கம் எண் :

சமூகம் - தொழிலாளர்

தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்

கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது.அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது. கைத்தொழில்செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத்தொழிலைநடத்துகிறது. 'புத்தியில்லாத மூடர்கள் சக்ரவர்த்திகளாகவும்,ராஜாக்களாகவும், பெரிய நிலஸ்வான்களாகவும், முதலாளிகளாகவும் இருந்து பெருஞ்செல்வங்களைக்"கையாளுதல் காண்கிறோமே! எனவே, அறிவுத் திறமையாலும்,அறிவு முயற்சியாலும் பெருஞ்செல்வம் திரட்டப்படுகிறதென்றுசொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?'' என்று கேட்பீர்களாயின்,அதற்கு உத்தரம் சொல்லுகிறேன்.

பல இடங்களில் இப்போது மூடர்களிடம்செல்வமிருப்பது காண்கிறோமாயினும், இவர்களுக்கு இந்தச்செல்வம் ஏற்படுத்திக் கொடுக்க இவர்களுடைய முன்னோர்களில்அநேகர் அல்லது ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும், அந்தபுத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன்உழைப்பவனாகவும் இருந்திருக்கவேண்டும். புத்தி மாத்திரம்இருந்தால் போதாது. அதைக்கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் செல்வம்சேர இடமுண்டாகும். 'வெறுமே மிருகபலத்தால் ராஜாக்கள்ஸைந்யங்களின் மிகுதி காரணமாகப் பிற நாடுகளைக்கொள்ளையிட்டு அளவிறந்த பூமியும் செல்வங்களும் சேர்த்ததாகச்சரித்திரங்களில் படித்திருக்கிறோமே. அப்படியிருக்கையில், புத்திநுட்பத்தால் செல்வம் சேர்வதாகச் சொல்லுதல் தகுமோ?' என்றுகேட்பீர்களானால், அதற்கு விடை கூறுகிறேன். யுத்தம் மிருகத்தொழிலாக இருந்தபோதிலும், நல்லோர்களால் எவ்வகையாலும்"வெறுக்கத்தக்க இழிதொழிலாக இருந்தாலும், அதற்கு மிருகபலம்மாத்திரம் இருந்தால் போதும் என்று நினைப்பது தவறு. யுத்தசாஸ்திரம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம், அதில் மிருகபலம்கருவு; அறிவு கர்த்தா. ஸாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலேகூடத் தலைவனாக இருப்பவன் சிறந்த புத்தி நுட்பமுடையவனாகஇருத்தல் இன்றியமையாதது. எத்தனையோ விதமான அறிவுப்பயிற்சிகள் ஆதிகால முதலாகவே யுத்தத்துக்கு அவசியமாகஏற்பட்டிருக்கின்றன. அதிலும், தற்கால யுத்தங்களோ பல பலதுறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்டபண்டிதர்களாலே நடத்தப்படுகின்றன.

வியபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதானநெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம்"எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது.இக்காலத்தில் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒருக்ஷணங்கூடத் தரித்து நிற்கமாட்டா.

இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல்அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்குக்கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். 'எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும்தொலைவில் விலக்கிவிட வேண்டும்' என்ற விநோதவிதியொன்று மனுஸ்ம்ருதியிலே காணப்படுகிறது. நம்முடையதேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும் எல்லாநாடுகளிலும் கைத்தொழிலாளருக்குக் கல்விப் பயிற்சிஉண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்றுவந்திருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி, எல்லா நாடுகளிலும், முக்கியமாக, நமது பாரத தேசத்தில்,கைத்தொழில் புரியம் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர்கல்வித் தேர்ச்சியடைந்து வந்திருக்கிறார்கள். ஆனால்,இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும்தம்முடைய பரம்பரைத் தொழில்களில் இறங்காமல், சுத்தஇலக்கியப் பயிற்சியிலேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.