எனினும், சென்ற ஓரிரண்டு நூற்றாண்டுக்குள்ளேஐரோப்பாவில் எல்லா வகுப்பினருக்கும் கல்வி பயிற்றும்முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த ஸர்வ ஜனக்கல்வி யென்னும் கொள்கை ஐரோப்பாவிலிருந்து உலகத்தின்பிறபகுதிகளிலும் தாவிவிட்டது. இக்கொள்கையை நமதுநாட்டில் நிறைவேற்றிவிட வேண்டுமென்று பலபுண்ணியவான்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள்.இங்ஙனம் எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த எல்லாமனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகியபலவகைப்பட்ட அறிவுப்பயிற்சிகளும் பரவிவிடுமானால்,அதினின்றும், கைத்தொழிலாளிகள் கல்விப் பயனைக்"காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமேசெலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்குஉரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத்தொடங்குவார்கள். இதினின்றும் இதுவரை உலகத்தில்கைத்தொழிலாளர் பரம ஏழைகளாக இருந்துவரும் நிலைமைநீங்கி மேன்மேலும் கைத்தொழிலாளருக்குள்ளே செல்வம்வளர்ச்சி பெற்று வர ஹேதுவுண்டாகும். இப்போது நமது நாட்டில் அங்கங்கே பலதொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன.இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக்குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள். இந்தப் பிரயத்தனங்களெல்லாம்முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை. ஆனால், இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலேமுயற்சி செய்வதுடன் தமது கார்யங்களை நிறுத்திவிடாமல்,அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்திஅவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்யவேண்டும். மேலும்,பகற்பள்ளிக்கூடங்கள் மாத்திரமே யன்றி இராப்பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் - எல்லாப்"பிராயத்தினரும் - சென்று படிப்பதற்குரிய காரியங்களைநடத்தவேண்டும். அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய்.ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும் மருமகளும் போல்வர்என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும், செல்வமுள்ளஇடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமதுநாட்டில் பரம மூடத்தனமான கொள்கை யொன்று பரவிநிற்கிறது. வெறுமே வர்ணனைகளும், கற்பனைகளும் சமைத்து,யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் காவியங்கள்எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்குஅதிகச்செல்வம் சேர மார்க்கமில்லை யென்பது ப்ரத்யக்ஷம்.இந்த அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டே மேற்படி கொள்கைஆதிகாலத்தில் உற்பத்தியாயிற்று. ஆனால், அது இக்காலத்துக்குப்பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய நடையில் எழுதினால்அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வியும் பரவிவரும்இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும்.காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல், பலவகைவியாபாரங்களுக்கும், தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள்படித்து, அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு,மேன்மேலும் செல்வம் பெருகும். ஆதலால், தொழிலாளிகளே,கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள்மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள். |