ஆனால், சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகஐரோப்பாவில் ஸகல ஜனங்களும் ஸமானமென்றும்,ஆதலால் பிறப்புப் பற்றியேனும், உடைமை பற்றியேனும்,தொழில் பற்றியேனும், மனிதருக்குள்ளே எவ்விதமேன்மை தாழ்வுகளேனும் உணவு உடைமுதலியஅவசியப் பொருள்களின் அனுபவத்தில்வேற்றுமைகளேனும் பாராட்டக் கூடாதென்றும் ஒருபுதிய கொள்கை தலைப்பட்டு நடந்துவருகிறது. சென்றசில வருஷங்களாக இக் கொள்கை அந்தக் கண்டத்தில்மிகவும் வலிமையுடையதாய் விட்டது. ஆரம்பமுதலாகவே இக் கொள்கை ஐரோப்பாவில்தொழிலாளருக்குள்ளே அதிகம் செல்வாக்குப்பெற்றுவந்தது. நூலாசிரியர்களும், உபாத்தியாயர்களும், மாஸம்"1,000 ரூபாய் வாங்கும் குமாஸ்தாக்களும், மாஸம் 2,000ரூபாய் ஸம்பாதிக்கும் பத்திராதிபர்களும், இவர்களைப்போன்ற பிறரும் தொழிலாளிகளுடன் சேர்த்துகணக்கிடுவதற்குரியவரென்ற கொள்கை ஐரோப்பாவிலேயேஆரம்ப முதல் கிடையாது. இது சமீபகாலத்திலேநேர்ந்ததொரு புதிய கொள்கை. ஆதியில், தொழிலாளரின்கிளர்ச்சி ஐரோப்பாவில் வேரூன்றியது. முக்கியமாகயந்திரசாலைகளின் ஸ்தாபனத்தினாலேயாம். அதற்குமுன்னர், அங்குள்ள தொழிலாளர் பெரும்பாலும்ஜமீன்தார்களிடமும் எண்ணற்ற சிறு சிறு தொழிற்கூடங்கள் வைத்து வேலை செய்த தொழிலாளரிடமும்,சிறு சிறு முதலாளிகளிடமுமே வேலை செய்துகொண்டிருந்தனர். தத்தம் வீட்டிலேயே தறி முதலியனவைத்து தாமே முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும்வேலை செய்தோர் பலர். இப்படியிருக்கையிலே, துணிநெய்யவும், இரும்பு தறிக்கவும், மர மறுக்கவும்,எண்ணெயாட்டவும், பாத்திரங்கள் செய்யவும், முக்கியமானதொழில்களுக்கெல்லாம் யந்திரங்கள் ஏற்பட்டன. அதாவதுமனித சக்தியால் செய்துகொண்டு வந்த காரியங்கள் நீராவியின் சக்தியாலும், மின்சார சக்தியாலும்செய்யப்படலாயின. நீராவியும் மின்சாரமுமோ அபாரவலிமை கொண்ட பூத சக்திகள். அவற்றின் திறமைக்குவரம்பே கிடையாது. ஆயிரம் மனிதர் சேர்ந்து ஆயிரம்நாட்களிலே செய்தற்குரிய தொழிலை இந்த இயந்திரங்கள்ஒரு தினத்தில் செய்து முடிக்கத்தொடங்கின. எனவே,"பெருஞ் செல்வமுடையோர் தம்முள்ளே கூட்டுகள்கூட்டிக்கொண்டு யந்திரங்களை ஏராளமாகத் தயார் செய்துஅவற்றின் மூலமாக நெசவு முதலிய தொழில்களைச்செய்யத் தலைப்பட்டனர். இதனால் ஏககாலத்தில்பதினாயிரம் லக்ஷக்கணக்கான தொழிலாளருக்குத்தொழிலில்லாமற் போய் பட்டினி கிடக்க நேர்ந்தது. இதுதான்ஐரோப்பாவிலே தொழிலாளர் கக்ஷி வேரூன்றி பலப்படத்தொடங்கியதின் காரணம். அதற்கு முன்பு தனித்தனி ஜமீன்தார்களிடத்திலும்சிறு சிறு முதலாளிகளிடத்திலும் வேலை செய்ததொழிலாளிகள் தத்தமக்கு நேரும் குறைகளை தத்தம்இடத்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி கெஞ்சியும் முணுமுணுத்தும்சில ஸமயங்களில் சிறு கலகங்கள் நடத்தியும்தீர்த்துக்கொண்டார்கள். 19-ஆம் நூற்றாண்டின்தொடக்கத்திலேதான் யந்திரங்களின் சக்தியால் தொழில்செய்யும் முறைமை மிகுதியுற்றது. அப்போதுதான் அங்குள்ளதொழிலாளிகள் முதலாளிகளுக்கெதிராகக் கிளர்ச்சி நடத்தும்வழக்கத்தை கைக்கொள்ளலாயினர். நாட்பட நாட்பட,யந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி முதலியனஐரோப்பாவினின்றும் ஆசியா முதலிய இதர கண்டத்துஜனங்களினிடையே அதிகமாக விற்கப்படலாயின. இங்கிலாந்து"முதலிய தேசத்தார் தம் நாடுகளுக்கு வேண்டிய துணிகள்முதலியனவே யன்றி உலக முழுமையிலும் கொண்டு விற்கவேண்டுமென்ற நோக்கத்துடனும் தாம் புதுமையாய்க் கண்டுபிடித்த பூத சக்திகளாகிய நீராவியையும் மின்சாரத்தையும் கொண்டு வேலை செய்வாராயினர்.இதனால் உலகத்துச் செல்வம் மேன்மேலும் ஐரோப்பாவிற்குச்செல்ல இடமுண்டாயிற்று. அதினின்றும் ஆரம்பத்திலேபல தொழிலாளிகள் வேலையிழந்து அங்கு பட்டினிகிடக்க நேர்ந்த துன்பத்துக்குத் தக்க நிவாரணமுண்டாய்அந்த நிவர்த்தி மேன்மேலும் மிகுதிப்பட்டு வந்தது. |