பக்கம் எண் :

சமூகம் - தொழிலாளர்

அதற்கு முன் இருந்த ஜன ஸமூக வரம்புகளும்நியதிகளும் சிதறிப் போய்விட்டனவே யெனினும்பெரும்பாலும் தொழிற் கூட்டத்தாருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆசியாவிலும் பிற கண்டங்களிலும் லக்ஷம்கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஐரோப்பியத் துணிமுதலியன ஏற்றுமதியாகத் தலைப்பட்டதினின்றும் ஐரோப்பியதொழிற் கூட்டத்தாரிடையே தொழிலற்றவராய் வருந்தியஜனங்களின் தொகை மேன்மேலும் குறையலாயிற்று.எனினும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும்இடையே ஏற்பட்ட கக்ஷி பேதங்கள் தீரவில்லை; அவைமிகுதிப்பட்டுக் கொண்டே வந்தன. இதற்குக் காரணம்அங்கு தொழிலாளருக்குள்ளே சங்க சக்தி அபாரமாக"அதிகப்பட்டு விட்டது. ஒவ்வொரு ஆலையிலும்பதினாயிரம் லக்ஷக்கணக்கான தொழிலாளிகள் வேலைசெய்தனர். இவர்களுக்குள்ளே பலர் கல்வி கற்றோர்ஆயினர்.

இதனிடையே மேற்கூறப்பட்ட ஸமத்துவக்கொள்கை, அதாவது, குற்றங்களுக்குத் தண்டனைவிதிப்பதில், செல்வருக்கும் எளியோருக்கும், மேற்குலத்தாருக்கும் கீழ்க்குலத்தாருக்கும், சட்டம் ஸமானமாகவேலை செய்ய வேண்டுமென்றும், உணவு முதலியஸௌகரியங்களிலும் லௌகீக மரியாதைகளிலும்மானிடருக்குள்ளே எக்காரணம் பற்றியேனும் யாதொருவேற்றுமையும் நடைபெறக் கூடாதென்றும், உலகத்தில்எல்லா மனிதரும் எல்லா வகைகளிலும்ஸமானமாவாரென்றும் பிரான்ஸ் தேசத்தில் பதினெட்டாம்நூற்றாண்டில் எழுச்சிபெற்று நாட்பட நாட்பட ஐரோப்பாமுழுவதிலும் வியாபித்துக் கொண்டு வந்ததொருகொள்கை தொழிலாளரிடையே மிகுதியாகப்பரவலாயிற்று. அதன் மேல் இத்தொழிலாளர் 'நாம்பாடுபட்டு உற்பத்தி செய்யும் பொருள்களை விற்று இந்தமுதலாளிகள் இத்தனை பணம் ஸம்பாதிக்கிறார்கள்.நாமோ பெரும்பாலும் குடியிருக்கக் குடிசைகளும்சாக்கடைகளும் தின்பதற்குப் பழைய ரொட்டியும்பழைய மீனுமாக வாழ்ந்து வருகிறோம். இவர்கள்"மாளிகைகளில் வாழ்ந்து குபேரஸம்பத்தை அனுபவிக்கிறார்கள். இது ஸமத்துவக் கொள்கைக்குமுற்றிலும் விரோதமானது. இவர்கள் முதல் போட்டார்களேயெனில், நாம் பாடுபட்டோம். எல்லோருக்கும் லாபம்ஸமானமாகவே இருக்க வேண்டும்' என்றுவிரும்பலாயினர். எனினும் திடீரென்று ஸமபாகம் கேட்கதுணியாமலும் அதனைப் பெறுதல் சாத்யமில்லை யென்றுநிச்சயமாகத் தெரிந்தபடியாலும் சிறிது சிறிதாக கூலிஉயர்வுக்குக் கலகம் பண்ணிக்கொண்டு வந்தார்கள்.

வாஸத்திற்கு ஸௌகரியமான வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென்றார்கள், தொழிலாளிகள் கிழவரானஇடத்திலும் நோயாளிகளான இடத்திலும் இனாம் சம்பளம்கொடுக்கவேண்டு மென்றார்கள், தங்களுக்கும் தம்முடையமக்களுக்கும் படிப்புச் செரல்லி வைப்பதற்குரிய சாதனங்கள்செய்யவேண்டு மென்றார்கள். தொழில் நோக்கத்தைக்குரைக்க வேண்டுமென்றார்கள், படிப்படியாகஇவ்வேண்டுதல்களை முதலாளிகள் தெரிந்து கொண்டேவந்திருக்கிறார்கள் எனினும் இத்தகைய போராட்டங்களில்இன்றுவரை தொழிலாளிகளே வெற்றியடைந்து கொண்டுவருகிறார்கள். இதற்குரிய காரணங்கள் பல. இவற்றைக்குறித்து பிந்திய பகுதிகளில் விஸ்தாரமாக எழுதுகிறேன்.கிடக்க நேர்ந்த துன்பத்துக்குத் தக்க நிவாரணமுண்டாய்அந்த நிவர்த்தி மேன்மேலும் மிகுதிப்பட்டு வந்தது.