தொழிலாளர் பெருமை ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிகளுக்கும்முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட வேற்றுமைகள்இப்போது மிகவும் முற்றிப்போய்விட்டன. இந்நிலையில்அவ்விரண்டு கக்ஷியாருக்குமுள்ள மனஸ்தாபங்களையெல்லாம் தீர்த்து அவர்களில் ஒரு திறத்தாரால்மற்றொரு திறத்தாருக்கு விளையும் பரஸ்பரமான கஷ்டநஷ்டங்களைப் போக்கி அவர்களுக்குள்ளேஸமாதானமும் ஒற்றுமையுணர்வும் ஏற்படுத்துதல் மிகவும்சிரமமான காரியம். இஃது வெறுமே சாதாரண மனிதயத்தனத்தால் நிறைவேறக்கூடியதாக தோன்றவில்லை.உலகத்தில் இதுவரையில்லாத புதிய தெய்வீக சக்திகள்"கொண்ட அவதார புருஷர்கள் தோன்றினால் அவர்களேஐரோப்பாவில் மூண்டிருக்கும் இந்தப் பெரிய விபத்துக்குஸமாதான வழிகளிலே நிவர்த்தி செய்யக்கூடும். 'சென்றஇரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பியத் தொழிலாளர்சிறிது சிறிதாக சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும்உரிமைகளுடனே அவர்கள் திருப்திகொண்டு இருக்கவேண்டும். இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும்உரிமைகளே மிகவும் அதிகம். இவற்றைக் கூடஇன்னும் குறைத்தால் நல்லது. இப்படியிருக்க,தொழிலாள்ளர் இன்னும் அதிகமான உரிமைகள்கேட்பதற்கு நாம் கொஞ்சமேனும் செவி சாய்க்கக்கூடாது'என்று பெரும்பான்மையான முதலாளிகள் நினைக்கிறார்கள். தொழிலாளரோ, அங்கு ராஜாங்கஅதிகாரத்தை தமது வசமாகச் செய்து கொண்டாலன்றி,அதாவது, தங்கள் இஷ்டப்படி சட்டம் போட்டு,முதலாளிகளினுடைய பணத்தை தங்கள் இஷ்டப்படிவிநியோகிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டாலன்றி,தங்களுக்கு முதலாளிகளிடமிருந்து நியாயம் கிடைக்கஇடமில்லை என்று நினைக்கிறார்கள். எனவே, இங்கிலாந்து முதலிய தேசங்களிலுள்ளதொழிலாளிகள் பார்லிமெண்ட் சபையில் தாம் ஆதிக்கம்பெற்று, அதன் மூலமாக தம்முடைய கட்சியாரே"மந்திரிகளாகும் படியான நிலைமையை ஏற்பாடு செய்துகொண்டு, இவ்வழியாலே ராஜ்யாதிகாரத்தையும்தம்முடையதாகச் செய்து கொள்ளும்படி மும்முரமானமுயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால், மேற்படிதேசங்களில் ராஜ்யாதிகாரம் இப்போது பெரும்பாலும்முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதால், அந்தமுதலாளிகள் தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம்தொழிலாளிகளைத் தலை தூக்க ஒட்டாமல் அழுத்திவிடமுயற்சி செய்து வருகிறார்கள். இதனால் அவ்விருதிறத்தாருக்குள்ளே சமாதானமும் சிநேகிதத் தன்மையும்ஏற்படுவதற்கு வழியில்லாமல், நாளுக்கு நாள்மனஸ்தாபங்களும், அவநம்பிக்கையும், வயிற்றெரிச்சல்களும் மிகுதிப்பட்டுக் கொண்டுதான்வருகின்றன. |