பக்கம் எண் :

சமூகம் - தொழிலாளர்

இந்தியாவில் இந்த விபரீதமான நிலைமைஏற்படவேண்டுமென்பது நம்முடைய விருப்பமன்று.ஐரோப்பாவில் ஆரம்ப முதலாகவே தொழிலாளரும்,முதலாளிகளும் தொழிலின் பெருமையையும் அவசியத்தன்மையையும் நன்கு கருதியிருப்பார்களாயின்,இப்போது அங்கே இவ்வளவு பயங்கரமான நிலைமைஏற்பட்டிராது. எனவே இந்தியாவில் முதல் முதலாகத்தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச்சமயத்திலே, நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள்,தொழிலாளிகள் என்று இரு திறத்தாரையும் ஆதரவுடன்கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏற வொட்டாதபடி முளையிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளரை முதலாளிகள்இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே"நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்.தொழிலின் மஹிமையையும் இன்றியமையாத்தன்மையையும் எல்லா ஜனங்களும் அறியுமாறு செய்யவேண்டும்.

ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்தஏற்பாடுகள் செய்யாவிடின், நாளடைவில் ருஷ்யாவிலுள்ளகுழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேதுஉண்டாய்விடும்.

ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காகநிகழ்ந்து வரும் பல புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்துசைனியங்களில் பெரும் பகுதியார் தொழிற் கட்சியையும்அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய்விட்டனர்.இதினின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற் கட்சிக்குக்கிடைத்து விட்டது. தேசத்து நிதி யனைத்தையும் சகலஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து, எல்லாரும் தொழில்செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள். தேசத்துப் பிறந்தஸர்வ ஜனங்களுக்கும் தேசத்துச் செல்வம் பொது என்பதுஉண்மையாய் விடின், ஏழைகள் செல்வர் என்றவேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற்போகும்படி ஸகலரும் தொழில் செய்து தான் ஜீவிக்கவேண்டும் என்ற விதி வழங்குமானால், தேசத்துத் தொழில்மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் க்ஷேமமும் "சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும்.

எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடையகொள்கைகள் அவ்வளவு தீங்குடையன வல்ல. ஆனால்,அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில்ஏற்படுத்தியிருக்கும் தீராச் சண்டையும் அல்லலுமே தீங்குதருவனவாம். ருஷ்யக் கொள்கைகளை இப்போதுஅனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில்ஸ்தாபனம் பெற்று வெற்றி பெறவேண்டுமானால், அதற்குள்ளேமுக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள்.வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று.நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரைஒருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும்,பீரங்கிகளாலும் தூக்கு மரங்களாலும் கொல்லத்தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?

இந்தியாவில் இந்த நிலைமை நேரிடாத வண்ணம்,ஜனத்தலைவர்கள் இப்போதே தீவிரமாகவும் பலமாகவும் வேலைசெய்யத் தொடங்கவேண்டும். தொழிலாளரிடம் பொதுஜனங்களும் முதலாளிகளும் மிகுந்த மதிப்புச் செலுத்தும்படிஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற்படியாம். ''தம்முடைய"காரியத்தைச் செய்யவேண்டியதே தொழிலாளியின் ஆத்மாவுக்குஈசனால் விதிக்கப்பட்ட புருஷார்த்தம்'' என்று முதலாளிகளில் பலர்நினைக்கிறார்கள். யந்திரங்களைப் போலவே இவர்கள்மனிதரையும் மதிக்கிறார்கள். பொதுவாக ஏழைகளிடம்செல்வருக்கு உள்ள அவமதிப்பு அளவிடும் தரம் அன்று.இவ்விதமான எண்ணம் நம்முடைய தேசத்திலும் செல்வர்களிடத்துமிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வெண்ணத்தை உடனேமாற்றித் தொழிலாளிகளையும் மற்ற ஏழைகளையும் நாம்ஸாதாரண மனிதராக நடத்தவேண்டும். அதிலும் தொழிலாளிகளின்விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்த வேண்டும். இவ்வித மதிப்பினால் நாம் தொழிலாளிகளின் விஷயத்தில் என்னென்ன கடமைகள் செலுத்த நேரும் என்பதை பின்னொரு வியாசத்திற் பேசுகிறேன்.