பக்கம் எண் :

சமூகம் - உடம்பு

உணவு

இந்திரப்ரஸ்த நகரத்தின் கடைசி க்ஷத்திரிய அரசனானப்ருதிவிராஜனுடைய ஸேனாதிபதிகளிலே சாமிண்டராய் என்று ஒருவன் இருந்தான். வடபக்கத்து முஹம்மதிய அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்டமாத்திரத்தில் நடுக்க முண்டாகும்படி அவன் அத்தனை வீரமும் யுத்தத்திறமையும் கொண்டு விளங்கினான். அவனுடைய சரீர வலிமையை அக்காலத்தில் பாரத தேசம் முழுவதிலும் நிகரற்றதாகக் கொண்டாடினார்கள். அவனுக்குச் சாமுண்டி உபாஸனையுண்டு. விரதங்கள், கண் விழிப்புக்கள், தியானங்கள், வ்யாயாமங்கள் இவற்றிலேயே தனது காலமுழுதும் கழித்தான். அவன் உணவு கொள்ளும்போது வீமனைப்போல் அளவில்லாத பசியுடன் உண்பான் என்று சந்தகவி'ப்ருதிவிராஜ்ராஸோ' என்னும் தமது காவியத்திலே "எழுதியிருக்கிறார்வீமனுடைய பெயர்களில் ?வ்ருகோதரன்? என்பதொன்று. அதாவது, ஓநாய் வயிறுடையவன் என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக்கருதிச் சொல்லியது. இக்காலத்திலே குறைவாக உண்ணுதல் நாகரீகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.

பெருந்தீனிக்காரன் என்றால் அவமதிப்புண்டாகிறது.சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்கமுடியாமல் கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல்சரியான பலமில்லாமல் உடம்பைக் கொழ கொழ வென்றுவைத்துக்கொண்டு நாக்கு ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனிதின்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது இயற்கையேயாம்.சிங்கம் புலிகளைப்போல் உடல் வலிமையும் அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது; சாதாரணமாகப் பயம் உண்டாகும். நானாவிதமானவிலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான்உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு.காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல்பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

பசி

சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவிலே பலம் சேர்ந்துவிடும். பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல்,மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாதபடி தடுக்கும் பெற்றோர் தாமறியாமலே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்.