பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)

இந்த விஷயத்தில் மனித ஜாதியாரின் நிலைமைமற்றமிருகங்கள் பக்ஷிகள் நிலைமையைக் காட்டிலும் அதிகபரிதாபகரமாகவும் இழிவாகவும் ஏற்பட்டிருக்கிறது.திருஷ்டாந்தமாக, பன்றி ஜாதி அல்லது நாய் ஜாதியை எடுத்துக் கொள்ளுங்கள். பலஹீனமான நாயொன்று ஏதேனும்ஆஹாரம் தின்று கொண்டிருக்கும்போது அகஸ்மாத்தாகஅங்கே பலசாலி நாயொன்று வருமாயின் அந்தச் சமயத்தில்மாத்திரம் பலமில்லாத நாய் அவ்வுணவைப் பலசாலிநாய்க்குக் கொடுத்துவிட்டுத் தான் ஆடிப் போய்விடும்படிநேருகிறது. ஆனால், சில சில சமயங்களில் மாத்திரம் இந்தஸம்பவம் நிகழ்வதல்லாமல், எப்போதுமே (மனித"ஜாதியிலிருப்பது போல) இஃது நியதமாகநடைபெறுவதில்லை.

மேலும், நான்கு பன்றிகள் அல்லது நான்குநாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில்கிடைக்கக் கூடிய ஆஹார முழுதும் தங்களுக்கேதஸ்தாவேஜூப்படி சொந்தம் என்றும் தாங்களாகஇஷ்டப்பட்டு தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும்அளவுப்படி தான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லாநாய்களும் உண்ணக் கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம்(மனிதருக்குள் இருப்பதுபோல்) அந்த ஜந்துக்களிடையேகாணப்படுவதில்லை. சிறு தொகையான மனிதருக்கு அடுத்தவேளை ஆஹாரம் கிடைப்பது நிச்சயமாகவும் பெருந்தொகையோர்க்கு அடுத்த வேளை சோறுநிச்சயமில்லாமலும் ஏற்பட்டிருக்கும் ஸம்பிரதாயம்மனிதரைத் தவிர வேறெந்த ஜாதி ஜீவர்களிடத்திலும்கிடையாது. 'காக முறவு கலந்துண்ணக் கண்டீரே?'

எனவே, மிகவும் முக்கியமானதும் ஜீவஜாதிகளுக்குபரம அவசியமானதுமாகிய இந்த அம்சத்தில், மனிதருடையநாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பக்ஷிகள்முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ்வானது"என்பதில் சிறிதேனும் ஸந்தேஹமில்லை. இதில் வேறொருவிஷயம் யாதெனில், மனித ஜாதிக்குள்ளே கூட மற்றெல்லாவகுப்பினரைக் காட்டிலும் ஹிந்துக்கள் அதிக இகழ்ச்சியடைந்துஅதிக பரிதாபகரமான ஸ்திதியிலிருக்கிறார்கள்.

முற்காலத்திலே இந்தியா செல்வத்துக்கும்,கல்விக்கும், ஞானத்துக்கும், தியானத்துக்கும், பக்திக்கும்,வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்களுக்கும்,பலவிதமான கைத்தொழில்களுக்கும் விசேஷ ஸ்தலமாக விளங்கி வந்தது. இக்காலத்திலே, இந்தியா பஞ்சத்துக்கும்,பசி மரணத்துக்கும், வறுமைக்கும் சிறுமைக்கும், தொத்துநோய்களுக்கும் சாசுவத ஸ்தலமாயிருக்கிறது. இந்தியதேசத்தார் அழிவுறுவதுபோல் மற்றபடி பூமண்டல முழுதிலும்எந்நாட்டிலும் மனிதர் இவ்வாறு வருஷந் தவறாமல் வேறுகாரணம் யாதொன்றுமில்லாமல் சுத்தமான பஞ்சக் காரணமாகபதினாயிரம் லக்ஷக் கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காணமுடியாது. மனிதஜாதியார்களுக்குள்ளேயே இப்படியென்றால், மற்ற மிருகங்கள்,பட்சிகள், பூச்சிகள் வருஷந் தவறாமல் கூட்டங் கூட்டமாகவெறுமே சுத்தமான பட்டினியால் மடியும் அநியாயம்கிடையாதென்பது சொல்லாமலே விளங்கும்.