பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)

ஏனென்றால், ஒருவன் எத்தனை விசேஷ அநுகூலங்கள் படைத்திருந்தபோதிலும், ஏதேனும் ஒருவிஷயத்தில் அவன் வேறு சிலருக்குக் குறைந்தவனாகவேஇருக்கும்படி இயற்கை யமைப்பு இருக்கிறது.

அளவிறந்த கல்வியுடையவன் கொஞ்சம் குள்ளனாகஇருந்தால் போதும். பிடித்தது சனி! நெட்டை மனிதரைக் கண்டுஅவன் பொறாமை கொள்வதினின்றும் நெட்டையாட்கள்அவனை இகழ்ச்சி செய்வதினின்றும் அவனுக்குப் பலவிதஅனர்த்தங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. அவன் தான்குள்ளனாகப் பிறந்ததைப் பற்றி ஓயாமல் மனம் நொந்து"சாகிறான்.

மிகுந்த செல்வமுடையவன் கொஞ்சம் கருநிறமுடையவனாக இருந்தால் போதும். வந்தது வினை!செந்நிறமுடையவர்களாலே அவனுடைய வாழ்க்கைநரகத்தைப்போல் ஆக்கப்படுகிறது.

இங்ஙனம் எத்தனையோ பேதங்களால் மனிதனுக்குப்பல தொல்லைகள் விளைகின்றன. எனினும், நான் தொடக்கத்திலேகூறியபடி செல்வத்தால் ஏற்படும் வேற்றுமைகளே சால மிகக்கொடியன. செல்வமுடையவன் செல்வமில்லாதவரிடத்துக்கொண்டிருக்கும் இகழ்ச்சியும், செல்வமில்லாதவன்செல்வமுடையோரிடத்தே கொண்டிருக்கும் பொறாமையும்வேறெந்த முகாந்திரத்தைக் கருதியும் மனிதருக்குள்ளேஏற்படுவதில்லை.

'கண்ணுடையோ ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு       புண்ணுடை யார் கல்லாதவர்'

என்று வள்ளுவர் சொல்லியபடி, படித்தவன் படியாதவனைவெறுமே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோ"பணமில்லாதவனைப் பிணமாக நினைக்கிறான்.

இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற முற்ற,ஸமத்வம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக்கொண்டே வருகிறது. எத்தனை வேற்றுமைகள்குணத்தாலும் செய்கையாலும் பிறப்பாலும் மற்ற வீண்நியமங்களாலும் மானிடருக்குள் ஏற்பட்டிருந்தபோதிலும், அந்தவேற்றுமைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லாரும் ஈசனுடையமக்கள் அல்லது அம்சங்கள் என்ற பரம ஸத்யத்தை மனதில் தரித்து எல்லாரையும் நிகராக பாவிக்க வேண்டும் என்ற கருத்து வேத ரிஷிகளாலும், கிறிஸ்து, புத்தர் முதலிய அவதார புருஷர்களாலும்மனிதருக்கு வற்புறுத்திக் கூறப் பட்டன. அவர்களை ஒட்டிஎண்ணிறந்த ஞானிகளும் பண்டிதர்களும் அக்கொள்கையைப்பலவகையாலே பரவச்செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.