இங்ஙனம், பரமார்த்த ஞானமுடையோர், ஆதிகாலம் தொட்டு, ஸமத்வக் கொள்கையைப் பரப்பிவருதல் ஒரு புறத்தே நிகழவும், சென்ற சிலநூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் பல வித்வான்கள்தெய்வத்தைப்பற்றி யோசனை செய்யாமல் வெறுமே மானிடவாழ்க்கை ஸூகமாகவும் ஸமாதானமாகவும் நடைபெறவேண்டும் என்கிற லௌகீக காரணத்தைக் கருதி ஸகலஜனங்களும் ஸமாதானமாகவே நடத்தப்பட வேண்டும்என்கிற கருத்தைப் பிரசாரஞ் செய்துகொண்டு வருகிறார்கள்.இக் கொள்கை, நாட்பட நாட்பட, ஐரோப்பாவிலும், அதன்கிளைகளாகிய அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும்ஐரோப்பிய நாகரீகத்தை அநுசரிக்க விரும்பும் ஜப்பான்,"இந்தியா முதலிய தேசங்களிலும் மிக விருத்தியடைந்துவருகிறது. ஒற்றைக் குடும்பத்தில் ஒரு பிள்ளைபுத்திமானாகவும் கல்வியுடையவனாகவுமிருக்கிறான், மற்றொருபிள்ளை கல்வியறிவற்ற மூடனாகவே இருக்கிறான்; ஒருவன்சிவப்பாக இருக்கிறான்; மற்றொருவன் கருநிறமுடையவனாகஇருக்கிறான். ஒருவன் பலசாலியாக இருக்கிறான்; மற்றொருவன பலஹீனனாக இருக்கிறான். ஒருவன்தைரியசாலியாக இருக்கிறான்: மற்றொருவன் கோழையாகஇருக்கிறான். ஒருவன் நெட்டை; மற்றொருவன் குட்டை.ஒருவன் அழகுடையவன்; மற்றொருவன் முகமெல்லாம்அம்மைத் தழும்புடையவனாய் ஒரு கண் பொட்டையாகஇருக்கிறான். எனினும், அறிவுடைய தாய் தந்தையர் இந்தமக்களுக்குள்ளே எவ்விஷயத்திலும் வேற்றுமை பாராட்டாமல்இவர்களை ஸகல விதங்களிலும் ஸமான அன்புடன் நடந்திவருகிறார்கள். அதுபோலவே, மனிதஜாதி முழுவதையும் ஒரேகுடும்பமாகக் கருதி மானிடருக்குள்ள இயற்கையாலும் மானிடர்தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும்,"இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிகஸௌகரியங்களும், பலருக்குக் குறைந்த ஸௌகரியங்களும்,சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும், சிலருக்குலாபங்களும், பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறுஎன்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப்போல் பரஸ்பரஅன்புடனும், மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும்,நவீன ஐரோப்பிய ஸித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமானஸித்தாந்தமாகும். இந்தக் கொள்கைக்கு எல்லா மதங்களும்சார்பாக இருப்பதை உத்தேசிக்கும் மிடத்தே, இது நாளடைவில்ஐரோப்பாவில் மாத்திரமின்றி உலக முழுமையிலும்பரிபூர்ணமாக வெற்றிபெறும் என்பதில் ஸந்தேஹமில்லை. இந்த ஸித்தாந்தம் பரிபூர்ண ஜயமடைந்துமனிதருக்குள்ளே ஸஹஜ தர்மமாக ஏற்பட்ட பிறகுதான்,மானிடர் உண்மையான நாகரீகம் உடையோராவர். |