பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)

மேலும், மானிடருக்குள்ளே இயற்கையால்ஏற்பட்டிருக்கும் வர்ண வேற்றுமைகள், உயர வேற்றுமைகள், சரீர பல வேற்றுமைகள் முதலியனவேமாற்ற முடியாதவை. செயற்கையால் உண்டாகிய கல்விவேற்றுமைகள், செல்வ வேற்றுமைகள், ஜாதி பேதங்கள்முதலியன எளிதாக மாற்றிக்கொள்ளக் கூடியன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பலதேசங்களிலும் ஏற்கனவே பிற்கூறிய வேற்றுமைகளைநீக்குவதற்குப் பலமான முயற்சிகள் நடைபெற்று வந்துநல்ல பயன்களும் ஏற்பட்டு விட்டன. எல்லாருக்கும்கல்வி கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம்"முக்கியமாக வலிமையடைந்து வருகிறது. தேசத்து மக்கள்அத்தனை பேருக்கும் கட்டாயமாகவும் இனாமாகவும்கல்வி கற்பித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.இந்த முயற்சி இன்னும் அதிக பலம் அடையும்.நாளுக்குநாள் இந்த முயற்சியில் சக்தியும் வேகமும்அதிகரித்து வருகின்றன. இதனினும் இன்னும் முப்பதுஅல்லது நாற்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும்அந்த முறையைக் கைப்பற்றி நடக்கும். இந்தியா, ஜப்பான்முதலிய தேசங்களிலும் படிப்புத் தெரியாதவர் ஒருவர்கூடஇல்லாமற் போய்விடுவார்கள் என்று நிச்சயமாய்ச்சொல்லலாம். ஜாதி பேதங்கள் இந்தியாவிலேயே சிதறுண்டுவருகின்றனவெனில் மற்ற நாடுகளைப் பற்றிப்பேசவேண்டியதில்லை.

இதுபோலவே. செல்வத்தைக் குறித்தவேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும்என்ற கொள்கையும் உலகத்தில் மிகத்தீவிரமாகப் பரவிவருகிறது. ஐரோப்பாவிலேதான் இந்த முயற்சி வெகுமும்முரமாக நடந்து வருகிறது. ஒரு தேசத்தில் பிறந்தமக்கள் அனைவருக்கும் அந்த தேசத்தின் இயற்கைச் செல்வ முழுவதையும் பொது உடமையாக்கிவிடவேண்டுமென்ற கொள்கைக்கு இங்கிலீஷில் 'சோஷலிஸ்ட்'கொள்கையென்று பெயர். அதாவது 'கூட்டுறவுக் கொள்கை.'"இந்தக் 'கூட்டுறவு வாழ்வு'க் கொள்கை (சோஷலிஸ்ட்)ஐரோப்பாவில் தோன்றியபோது இதை அங்குமுதலாளிகளும் மற்றப்படி பொது ஜனங்களும் மிகஆத்திரத்துடனும், ஆக்ரஹத்துடனும் எதிர்த்து வந்தார்கள்.நாளடைவில் இக் கொள்கையின் நல்லியல்புஅந்தக் கண்டத்தாருக்கு மேன்மேலும் தெளிவுபட்டுவரலாயிற்று. எனவே, இதன் மீது ஜனங்கள் கொண்டிருக்கும்விரோதம் குறைவுபட்டுக் கொண்டுவரவே, இக்கொள்கைமேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே,ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின், ஸ்ரீ மான் மின்த்ரோத்ஸ்கிமுதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும்குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும்தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடமையாகிவிட்டது. இக் கொள்கை ஜர்மனியிலும்,ஆஸ்திரேலியாவிலும், துருக்கியிலும் அளவற்ற வன்மைகொண்டுவருகிறது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும்தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரம்மாண்டமானபகுதியாக நிற்கும் ஸைபீரியா தேசம் ருஷியாவின்ஆதிக்கத்தைச் சேர்ந்ததாதலால், அங்கும் இந்த முறைமைஅனுஷ்டானத்திற்கு வந்துவிட்டது. அங்கிருந்துஇக்கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகிறது.ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ், இங்கிலாந்து முதலியவல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும்பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன்பரவுதலைக் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள்புரிந்து வருகிறார்கள்.