ஆனால், இந்த முறைமை போர், கொலை,பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவதுஎனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும்மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்கஸமத்வம் ஸஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களைக்கொண்டோர், அவற்றைக் குத்து, வெட்டு, பீரங்கி,துப்பாக்கிகளினால் பரவச்செய்யும்படி முயற்சி செய்தல்மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கிறேன்.பலாத்காரமாக முதலாளிகளின் உடமைகளையும்,நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கி தேசத்திற்குப்பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை"ருஷ்யாவில் வெற்றி பெற்றதற்கு பல பூர்வகாரணங்களிருக்கின்றன. நெடுங்காலமாகவே, ருஷியாதேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்றகொடுங்கோன்மையாலும், அநீதங்களாலும், செல்வர்களின்குரூரத்தன்மையாலும் பல ராஜாங்க புரட்சிகள் நடந்துவந்திருக்கின்றபடியால், இந்த மாறுதல் அங்கு அமைப்பதுஸுலபமாயிற்று. மற்ற ஐரோப்பிய தேசங்களில் முதலாளிகளும் செல்வர்களும் இன்னும் முற்றிலும்பலஹீனமடைந்து போகவில்லை. பெரும்பாலும்அவர்களிடத்திலேயே எல்லாப் பலங்களும் சக்திகளும்அமைந்திருக்கின்றன. அங்கெல்லாம் ''சோஷலிஸ்ட்''கூட்டுறவு வாழ்க்கைக் கட்சி ருஷ்யாவிலுள்ள சக்தியும்பராக்கிரமமும் பெற்றுவிடவில்லை. அங்ஙனம் பெறுவற்குஇன்னும் பல வருஷங்கள் செல்லும் என்றேதோன்றுகிறது. தவிரவும், அங்ஙனம் ''சோஷலிஸ்ட்''கட்சியார் பலமடைந்தபோதிலும், அந்த பலத்தைஉபயோகிப்பது நியாயமில்லையென்று நான்சொல்லுகிறேன். ஏனென்றால், பிறருடைமையைத் தாம்அபகரித்து வாழவேண்டும் என்கின்ற கெட்டஎண்ணமுடையவர்களும் ஸர்வ ஜனங்களும் ஸமானஸௌகர்யங்களுடன் வாழவேண்டும் என்கிற கருத்துஇல்லாத பாவிகளும் தம்முடைய கொள்ளைவிருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள்,பீரங்கி, துப்பாக்கிகளால் அநேகரைக் கொலை செய்து,ஊர்களையும் வீடுகளையும் கொளுத்தியும்"அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக்கூடியவிஷயம். அங்ஙனமின்றி, எல்லா மனிதரும் உடன்பிறந்த சகோதரரைப் போல் ஆவார்கள் என்றும்,ஆதலால் எல்லாரையும் ஸமமாகவும் அன்புடனும்நடத்தவேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள்தம்முடைய கருணாதர்மத்தை நிலை நிறுத்த கொலைமுதலிய மஹாபாதகங்கள் செய்வது நமக்குச்சிறிதேனும் அர்த்தமாகக் கூடாத விஷயம்கொலையாளும் கொள்ளையாலும், அன்பையும்ஸ்மத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிறோம் என்றுசொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள்என்று நான் கருதுகிறேன். 'இதற்கு நாம் என்னசெய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத்தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; என்று ஷ்றீமான்லெனின் சொல்லுகிறர். இது முற்றிலும் தவறானகொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய,அதை நீக்க வல்ல தாகாது. அநியாயம் அநியாயத்தைவிருத்தி பண்ணுமே யொழிய குறைக்காது. பாபத்தைபுண்ணியத்தாலே தான் வெல்லவேண்டும். பாபத்தைபாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர்கொள்கை. அதர்மத்தை தர்மத்தால் வெல்லவேண்டும்; தீமையை நன்மையாலேதான் வெல்லமுடியும். கொலையையும் கொள்ளையையும்அன்பினாலும் ஈகையாலும் தான் மாற்ற முடியும்.இதுதான் கடைசிவரை கைக்கூடிவரக்கூடிய மருந்து.மற்றது போலி மருந்து. சிறிது காலத்திற்கு நோயைஅடக்கி வைக்கும். பிறகு, அந்நோய் முன்னைக்காட்டிலும் ஆயிரம்மடங்கு அதிகவலிமையுடையதாய் ஓங்கிவிடும். ஒரு கொலையாளிக்கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேனா பலத்தாலும்ஆய்த பலத்தாலும் மற்றொரு கொலையாளிக்கூட்டத்தை அடக்கிவிடக்கூடும். இதனாலே தோற்றகூட்டம் நாளைக்கு பலம் அதிகப் பட்டு முந்தியகூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதூக்கி அதைஅடக்கும், இங்ஙனம் தலைமுறை தலைமுறையாகஇவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று தீமைசெய்து கொண்டே வரும். இதற்கு ஓய்வே கிடையாது.தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியேநிலைபெற்று நிற்கவல்லதாகும். இதனை அறியாதார்உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும்அறியாதார் ஆவர். |