பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)

மேலும், ருஷ்யாவிலும்கூட இப்போதுஏற்பட்டிருக்கும் ''ஸோஷலிஸ்ட்'' ராஜ்யம் எக்காலமும்நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருதவழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால்ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும்ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர்லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் ''கூட்டு வாழ்க்கைக்'' குடியரசை அழிக்க மனமிருந்தும்வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்தவல்லரசுகள் கொஞ்சம் சக்தி யேறிய மாத்திரத்திலேருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடைமை"இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்தஅரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும்இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும்கொள்ளைகளும் ரத்தப்பிரவாகங்களும் ஏற்படஇடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை.முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால்,இந்தியாவின் ஸாத்யாஸாத்யங்களைக் கருதியே நாம்யோஜனை செய்யவேண்டும். முதலாவது,இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளிகளும்ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப்போல்ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும்குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடையஉடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால்நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள்அதிகமாக விரும்பவும் மாட்டார்கள். எனவே,கொள்ளைகளும் கொலைகளும் சண்டைகளும்பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசிதீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக்கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்.செல்வர்களுடைய உடைமைகளை பலாத்காரமாகப்பறித்துக்கொள்ள முயலுதல் இந்நாட்டிலே, நான்மேற்கூறியபடி, பொருந்தவும் செய்யாது;ஸாத்தியமும் இல்லை.

ஆனால், கோடிக்கணக்கான ஜனங்கள்வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும்,லக்ஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளைக் கஞ்சிகிடைக்காமலே சுத்தப்பட்டினியால் கோர மரணமெய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையைநாம் ஒரு க்ஷணங்கூடச் சகித்திருப்பது நியாயமில்லைஎன்பது சொல்லாமலே போதரும்.