எனவே, உலகத் துன்பங்கள் அனைத்திலும்கொடிதான இந்த ஏழ்மைத் துன்பத்தை ஸமாதானநெறியாலும் மாற்றக்கூடிய உபாயமொன்றை நாம்கண்டுபித்து நடத்துவோமானால், அதினின்றும் நமதுநாடு பயனுறுவது மட்டுமேயன்றி, உலகத்தாரெல்லாரும்நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மைஅடைவார்கள். 'அப்படிப்பட்ட உபாயமொன்று கிடைக்குமா'என்பதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி செய்வோம். ஜனங்களுக்குள்ளே கலகங்களும் யுத்தங்களும்"கொலைச் செயல்களும் நேரிடாத வண்ணம் ஸமாதானநெறியிலே உலகத்தின் ஏழ்மையைத் தொலைப்பதற்குத்தகுந்த உபாயமாக எனக்குத் தோன்றுவதை இங்குதெரிவிக்கிறேன். உலகம் தேசங்களால் அமைக்கப்பட்டது. தேசம்மாகாணங்களின் தொகுதியாம். மாகாணங்கள் ஜில்லாக்களின்சேர்க்கையாகும். ஜில்லா, ஒரு சில நகரங்களும் பெரும்பான்மை கிராமங்களும் கூடிய தொகுதியாகும்.எனவே, ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டு அதில்வறுமையே இல்லாமல் செய்வதற்குரிய வழிகண்டுபிடிப்போமாயின், பிறகு அந்த உபாயமே பூமண்டலத்தின்வறுமையைத் தொலைப்பதற்குப் பொருந்தியதாய்விடுமென்பது சொல்லாமலே விளங்கும். திருஷ்டாந்தமாக,நான் இப்பொழுது வாசம் புரிந்து வரும் கடையம்கிராமத்தை எடுத்துக்கொள்வோம். இவ்வூரைச்சூழ்ந்திருக்கும் வயல்களெல்லாம் சுமார் 30 பெரியமிராசுதார்களுக்கும் பல சில்லரை நிலஸ்வான்களுக்கும்உரியன. இந்த நிலஸ்வான்கள் எல்லாரும் சேர்ந்த ஒருஸபைசமைக்கப்பட வேண்டும். இந்த ஸபையார் கோயில்வாயிலிலே கூட்டம் கூடியிதுந்து கொண்டு ஊர் ஜனங்கள்அத்தனை பேரையும் பறை சாற்றுவித்துத் தம்முன்னேவரவழைக்கவேண்டும். அப்போது நிலஸ்வான்கள்எல்லாருடைய ஸம்மதப்படி, அவர்களின் பிரதிநிதியாகியஒருவர் எழுந்து நின்று கிராமத்தாரிடம் பின்வருமாறுபிரமாணம் செய்துகொடுக்க வேண்டும். |