பக்கம் எண் :

சமூகம் - செல்வம் (2)

எப்படி என்றால்:-

''கஞ்சியாவது கிடைத்து வருகிறதெனினும் அதுநியதமாக எப்போதும் கிடைத்துவரும் என்ற நிச்சயம்இல்லாதபடியால் நீங்கள் எண்ணில்லாத மனக்கவலைகளுக்கும், மனஸ்தாபங்களுக்கும், பொறாமைகளுக்கும், வஞ்சனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும்,கலகங்களுக்கும் இரையாகி மடிகிறீர்கள். ''அன்னவிசாரம் அதுவே விசாரம்'' என்று பட்டினத்துப் பிள்ளைசொல்லியது போல், உங்களுக்கு இந்த ஆகார விசாரம்தீராத பெரு விசாரமாக வந்து மூண்டிருக்கிறது. நியாயமானஉழைப்பாலோ, அல்லது ப்ரூதோம் என்ற பிரான்ஸ்தேசத்து சாஸ்திரி, 'உடைமையாவது களவு' என்ற"சொல்லியபடி வஞ்சனைத் தொழில்களாலே, இந்தஊரிலுள்ள வயல்கள் தோட்டங்கள் எல்லாவற்றையும்எங்கள் சிலருக்கு மாத்திரம் உரிமையாகும்படி ஏற்பாடுசெய்துவிட்டார்கள். பூஸ்திதி எங்களிடம் இருப்பது எங்களுடைய குற்றமாகமாட்டாது. எனினும், உங்களுடையஒத்துழைப்பும் ஆதரவும் ஸ்நேஹமும் இல்லாவிட்டால்எங்களுக்கு இந்த நிலங்கள் எல்விதமான பயனும்தரமாட்டா. மேலும் நீங்கள் அத்தனை பேரும் ஆகாரவிஷயத்தில் ஒருவித நிச்சயமில்லாமையால் படும்கஷ்டங்களும் அதனின்றும் உங்களுக்குள் ஏற்படும்போராட்டங்களும் எங்களையும் சூழ்ந்து தீராததுன்பத்துக்கு உள்ளாக்குகின்றன. நாங்கள்பொருளுடைமை விஷயத்தில் மாத்திரம் உங்களின்றும்வேறுபட்டிருப்பினும், மற்றெல்லா அம்சங்களிலும்உங்களைப் போன்ற மனிதர்களே; ஆதலாலும்,உங்களுடனே எப்போதும் ஊடாடிப் பழகுவதும் விவஹரிப்பதும் எங்களுக்கு மிகவும்இன்றியமையாதாதலாலும், நீங்கள் தீராத வறுமை நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள்மாத்திரம் சந்தோஷமாக இருத்தல் சாத்தியப்படவில்லை.எங்களுடைய காரியங்களெல்லாம் உங்களாலே ஆகவேண்டியிருக்கிறது. எங்களுக்கு உங்களைத் தவிரவேறு கதியில்லை. உங்களுடைய வறுமைத் தீ எங்களைநானாவிதங்களிலும் சாபம் போல எரிக்கிறது."எங்களுக்குச் சிறிதேனும் ஒற்றுமையில்லாமல் செய்துவருகிறது. பூமி எல்லோருக்கும் பொதுவான தாய்போலாகும். அதில், நாங்கள் மாத்திரம் உரிமைகொண்டாடுதல் அநியாயம் என்று எங்களுக்குஅர்த்தமாகின்றது. அதனின்றும் பூர்வீக காலம் முதல்பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் சொத்தை, ருஷ்யாமுதலிய தேசங்களில் நடப்பதுபோல், நீங்கள்பலாத்காரமாக எங்களைக் கொன்றும் சிறையிலிட்டும்எங்களிடமிருந்து பறித்துக் கொள்வது நியாயம் இல்லை.ஏனென்றால், உடைமை பொது நாகரீகத்திற்குஹேதுவாகும். எந்தக் காரணம் பற்றியும் கொள்ளையிடுவதுசரியில்லை. நிலமில்லாத நீங்கள் எங்களுடைய நிலத்தைக்கொள்ளையிட்டுப் பறித்துக்கொள்ளலாமெனில், துணியில்லாதவர்கள் உங்களுடைய துணிகளைப்பறித்துக்கொள்ளலாமன்றோ? வீடில்லாதவர்கள் பிறர்வீடுகளைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஒரு சிறிதேனும்உடமையில்லாதவர்கள் மலைக்குறவர் இடையேகூடகாணப்படுவதில்லை. பூஸ்திதிமாத்திரம் தானா உடைமை?துணி, மணி, வீடு, பாத்திரம், பண்டம், பாய் தலையணி-எல்லாம் உடைமைகளே. மலைப் பழிஞர் நாட்டுக்குள்பிரவேசித்து உங்களுடைய வீடு பாத்திரங்களெல்லாம்அபகரித்துக்கொள்ளுதல் நியாயமென்று உங்களுக்குத்தோன்றுகின்றதா?