''எனவே, எங்களுடைய பூஸ்திதிகளை நீங்கள்பலாத்காரமாகப் பறித்துக் கொள்ளுதல் நியாயமன்று.ஆனாலும் பூமித்தாய் எல்லாருக்கும் பொதுவாகத் தரும்விளை பொருள்களை நாங்கள் சிலபேர் மாத்திரம்பங்கிட்டெடுத்துக் கொண்டு, உங்களுக்கு 'எங்களுடையதயவு இருந்தால் தான் ஆகாரம். எங்கள் தயவில்லாவிட்டால்பட்டினி' என்ற நிலையில் உங்களை வைத்து, அதனின்றுஉங்களை அடிமைகளாக்கி நடத்திவரும் மஹாபாவத்திற்குஇன்னும் ஆளாயிருக்க எங்களுக்குச் சம்மதமில்லை. ''இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலும்நிரப்பு'' என்று திருவள்ளுவர் சொல்லியது போல, (அதாவது,'நேற்று முழுதும் நம்மைக் கொலை செய்வது போலவேவருத்திக் கொண்டிருந்த வறுமை இன்றைக்கு வந்து விடுமோ'"என்று) பரிதபித்து ஏங்கும் நிலைமையில் நீங்கள் உயிர்வாழ்க்கை நடத்திவருகிறீர்கள். உங்களை இந்த உணவுநிச்சயமில்லாத நிலையில் வைத்திருக்கும் பாவத்தை இனிசுமந்து கொண்டிருப்பதில் எங்களுக்குச் சம்மதமில்லை.எனவே, உங்களில் ஆண் பெண் குழந்தை எவருக்கும்என்றைக்கும் ஆகாரவிஷயமாக பயமில்லாதபடி செய்துவிடவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்கு,பின்வரும் வழியை அனுசரிக்க வேண்டும் என்றுநிச்சயித்து இருக்கிறோம். அதாவது, எங்களில் சிலரும்உங்களில் சிலரும் கூடி 'தொழில் நிர்வாக சங்கம்' என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த் தொழில்,கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப் பயிற்சி), உணவு,துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியனசம்பந்தமாகிய நானாவகைப்பட்ட கைத்தொழில்கள்-இவைஇந்தக் கிராமத்துக்கு மொத்தம் இவ்வளவு நடைபெறவேண்டுமென்றும், அத் தொழில்களில் இன்னின்னதொழிலிற்கு இன்னார் தகுதியுடையவர் என்றும் மேற்படிதொழில் நிர்வாக சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள்.அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனை பேரும்தொழில் செய்யவேண்டும். அந்தத் தொழில்களுக்குத்தக்கபடியாக, ஆண் பெண் குழந்தை முதலியோர்இளைஞர் அத்தனை பேரினும் ஒருவர் தவறாமல்எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து"விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாகஇந்த ஒப்பந்தம் தவறமாட்டோம். இந்தப்படிக்கு இந்தஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின்மேல் ஆணையிட்டு பிரதிக்னை செய்து கொடுக்கிறோம்.இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தைஎங்களில் முக்யஸ்தர் கை எழுத்திட்டு செப்புப்பட்டையம் எழுதி இந்தக் கோயிலில் அடித்துவைக்கிறோம்.' இங்ஙனம் பிரதிக்னை செய்து இதில்கண்டகொள்கைகளின்படி கிராம வாழ்க்கைநடத்தப்படுமாயின், கிராமத்தில் வறுமையாவதுஅதைக்காட்டிலும் கொடிதாகிய வறுமையச்சமாவதுதோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும்ஏற்பட்டு, அற்பாயுள், நோய் முதலிய பிசாசுகளின்பயந்தொலைப்பது, பரிபூர்ண க்ஷேமம் உண்டாகும். ஒருகிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து,பின்னர் அதனை உலகத்தா ரெல்லாரும் கைக்கொண்டுநன்மை யடைவார்கள். தமிழ் நாட்டு மக்களே, இங்ஙனம்உலகத்தில் வறுமையைத் தீர்க்கும் பெருந் தர்மத்தில்வழிகாட்டுவோராக நிற்கும் மஹிமை உங்களைச்சார்வதாகுக. |