பக்கம் எண் :

சமூகம் - விசாரணை

கைதிகளை அன்புடன் நடத்தவேண்டும். அவர்களும்மனிதர்தானே? ஏன் குற்றம் செய்தார்களேன்று கோபிக்கிறாயா?  ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். ஒழுங்கானபடியிருந்தால் செய்திருப்பார்களா? தெளிந்த புத்தியிருந்தால் நடந்திருக்குமா?நல்ல ஸஹவாஸத்திலே பழக்கப்படுத்தி யிருந்தால் இந்தநிலைக்கு இழிந்திருப்பார்களா?  ஜன சமூஹத்திலே சிலரை நாகரீகநிலைமைக்குக் கீழே அமிழ்த்துவைத்த குறை யாரைச் சேர்ந்தது?இப்போதுகூட சிறுபிள்ளைகள் குற்றம் செய்தால் கடூர தண்டனைவிதிப்பதில்லை. 'திருத்தம் கூட'த்திலே போடுகிறார்கள். அமெரிக்க,முதலிய நாகரீக தேசங்களில், கைதிகளுக்கு நாள்தோறும் அதிகஸௌகர்யங்களும் க்ஷமையும் இரக்கமும் காட்டி வருகிறார்கள்.பழைய காலத்தில் இங்கிலாந்திலும் நமது தேசத்திலும் பெரும்பாலும் எல்லாத் தேசங்களிலும் சொற்பக் "குற்றங்களுக்கெல்லாம்மிகவும் கடூர தண்டனை விதித்து வந்தார்கள். இக்காலத்தில் எந்ததேசத்திலும் அப்படி நிஷ்டூரமான தண்டனை கிடையாது. விசேஷமாக, ராஜ்ய சம்பந்தமான குற்றங்கள் செய்து சிறைப்படுவோரைஇங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸாமான்யக் கைதிகளைப்போல்நடத்துவதில்லை. பலவிதமான குற்றங்களுக்குத் தண்டனை குறைந்துவருகிறது. மேலும் புராதன ராஜ்யங்களிலே மதத் திருத்தம், ராஜ்யத்திருத்தம் முதலியவற்றை விரும்புதல் குற்றம் என்று நீதிக்காரர்பாவித்திருக்கும் பல திருஷ்டாந்தங்கள் உண்டு. இப்போது அப்படியில்லை. பெரும்பான்மையான தேசங்களில் மேற்கண்ட திருத்தக்காரருக்கு ராஜ்ய ஸன்மானமும் உயர்ந்த பதவிகளும் கிடைக்கும்.ஆனால், இக்காலத்திலே கூட சில தேசங்களில் ராஜ்யத் திருத்தம்,மதத் திருத்தம் முதலியவற்றை நீதிக்காரர், குற்றமென்று சொல்லாவிட்டாலும், சற்றே சினந்த முகத்துடன் நோக்குகிறார்கள். இப்படிநடப்போர் நீதி சாஸ்திரத்தின் ஆதார வலிமைகளை நன்றாகத்தெரிந்து கொள்ளவில்லை.

தண்டனையின் கருத்து

குற்றஞ் செய்த மனிதனைச் சீர்திருத்தி இனிமேல் அவன் அக்குற்றஞ் செய்யாதபடி அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட வழி செய்யவேண்டும். இந்தக்கருத்துடன் தண்டனை செய்வோரையே தர்ம தேவதை க்ஷமிக்கலாம். பழிக்குப் பழி வாங்கிவிடவேண்டும் என்ற கருத்துடன் தண்டனை செய்கின்ற அதிகாரம் மனிதனுக்கே கிடையாது. ஏழையைப் பணக்காரனாக்கினால் பிறகு திருடமாட்டான். பேராசைக்காரனைக் கொஞ்சம் ஏழையாக்கினால் பிறகு திருடமாட்டான். மூடனுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தால், இந்திரியங்களைக் கட்டியாள முடியாதவனைவிரதங்களிலே போட்டால், உயர்ந்த பதவியிலிருப்போர்எப்பொழுதும் நியாயத்தையே செய்து காட்டினால், பிறகு களவு இராது.

''பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளை அதிகப்படுத்தினால், சிறைச்சாலைகள் குறையும்'' என்பதை அநேக நீதிசாஸ்திரக்காரர் தெரிந்து சொல்லுகிறார்கள். வாத்தியார்களின்தொகை அதிகப்பட்டால் போலீஸ் ஸேவகரின் தொகை குறையும்.நியாயமான அதிகாரத்தின் கீழ் பள்ளிக்கூடமும் வாத்தியாரும்மிகுதிப்படும்; போலீஸ் ஸேவகமும் சிறைச்சாலையும் குறையும்.