அப்போது அங்கு ஞானவொளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று. அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் ஏன் ஏன் என்ற தென்ன, பராபரமே என்று தாயுமானவர் பாடியிருக்கிறார். இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷிகாட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமேலீட்டால், "கடவுளே கடவுளே" என்று "தறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டிலிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும்,"ஏன், ஏன்" என்ற மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லௌகீக தந்திரி, வியாபாரமானாலும், யுத்தமானாலும் முஹம்மது நபிகவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார். எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினின்றும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸத்தியத்திற்கும் அல்லாவிற்கும்முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், ஸௌகர்யங்களையும், வாழ்வையும், செல்வத்தையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும்,ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர். இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதைநோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார். இங்கு ஸ்ரீீமான் சி. சுப்பிரமணிய பாரதி முஹம்மது நம்பியவர்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகஎடுத்துரைத்தார். ஆனால் ரவண ஸமுத்திரத்திலே இஸ்லாம் மதத்தின் மஹிமையைக் குறித்துச் செய்த உபன்யாஸத்தில்,அவ்விஷயம் சொல்லப்பட்டு ஏற்கனவே மித்திரனில் வெளிப்பட்டு இருப்பதால், இங்கு மீண்டும் ப்ரசுரம் செய்யவில்லை. அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கு அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நமது நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்புக் கிடையாது. கேள்வியால் மஹா பண்டிதரானார்: ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாதபக்தியால் அரசனும், கலீபும் தீர்க்க தரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும், வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூபக்கரின் குமாரியான பீவியைப் பிரதானநாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி.632-இல் இந்தமண்ணுலகை விட்டு முஹம்மது நபி வானுலகம் புகுந்தார். |