பக்கம் எண் :

ஓம் சக்தி - லோக குரு

"யோர்த்ரை" என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது:-  "உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும்" என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது."

இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக்கடன் பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப் பரவி ஏறக்குறைய நான்கு வருஷங்களாகவில்லை. இந்"நான்கு வருஷங்களுக்குள், ஜப்பான் தேசத்தில் ஸம்ஸ்கிருத இலக்கண புஸ்தகங்கள் எப்போதைக்காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். 'பாரத தேசமே லோக குரு' என்பதைஉலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்.

பாரத பூமி உலகத்தாருக்கு எந்த விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தைஓரிரண்டு சொல்லி முடித்து விடுகிறேன் 'செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறது' என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நமது ஜகதீச சந்திர வஸூ. உலோகங்களிலும், இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மஹாவித்வான்.தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை 'மார்க்கோனி' பண்டிதர்உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப்பற்றித்துல்ய ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார் செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி யெங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே, இவர் மனிதசாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது.இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம்மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமானகருவிகள் வேண்டும். ஜகதீச வஸூவின் ஆராய்ச்சிக் கருவிகள்கல்கத்தாவில் நமது தேசத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன.ஐரோப்பிய ராஜ தானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால்அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராச்சிக்கு வேண்டியகருவிகளையெல்லாம் "கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.

சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்ட மஹாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங்களும்இயற்கை நூலகளும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்திலபரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது"ஸயின்ஸ்" பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்.