இனிமேல், கதையைச் சுருக்கிவிடவேண்டும்; வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு 'லோக குரு' ஆகும்?உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப் போவது கர்மயோகம்.கடமையைச் செய்து, தவறாதபடி செய்து, இன்பத்தோடிருக்கவழி எப்படி? யோகமே வழி. "யோகமாவது செய்கைத் திறமை" என்று பகவான் கீதையிலே சொல்கிறார். பூமண்டலத்திற்கு யோகம் நாட்டுவோம். சென்னைக் கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர்மில்லர் என்றொரு பாதிரி யிருந்தார். அவர் நல்ல "புத்திசாலிஎன்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்றெல்லாமதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்களென்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி. கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்துகொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதங்களிலுமுண்டு. ஆனால் இங்கேதான் அதைத் தெளிவாகச் சொல்லுகிறோம். பிற மதங்களில் தெளிவில்லை. 'அந்தர்யாமி ' 'உள்ளே செல்வோன்.' 'உள்ளே நிற்போன்.' 'உள்ளே செல்வோன்' என்பது தாதுப் பொருள்.'உள்ளே நிற்போன்' என்பது வழக்கப் பொருள். "தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது" என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிறார்கள். இதன் அர்த்தத்தைஅவர்கள் நன்றாக மதியினாலே பற்றிக் கொள்ளவில்லை. "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்." ஆம், அதன் பொருள் முழுதையுங் கண்டாயா?சாத்தன் எழுதுகிறான், கொற்றன் எழுதச் சொல்லுகிறான். "எழுதுவோன், எழுதுவிப்போன் - இரண்டும் தெய்வம். பன்றிசாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம். எதனிலும்உள்ளே நிரம்பிக்கிடக்கிறது' என்றால், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம். "இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரம் கொண்ட மூடன் 'நான் செய்கிறேன்' என்று நினைத்துக் கொள்ளுகிறான்" என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிறான். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது.' 'என் செயலாவது யாதொன்றுமில்லை.' நமக்குப் பொறுப்பில்லை, தொல்லை யில்லை, செய்கையில்லை; கடமை மாத்திரம் உண்டு. 'கடமையில் உனக்கு அதிகாரம், பயனிலே இல்லை,என்பது கீதை. 'செய்கையில்லாது நீங்கிவிடுவது' என்றால் சோம்பேறியாய் விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்றாம் "அத்தியாயத்தை ஒவ்வொரு ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும். |