பக்கம் எண் :

ஓம் சக்தி - லோக குரு

முதலாவது விஷயம்:-  ஒருவிதமான செய்கையுமில்லாமல் சும்மாயிருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலேபுகுத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறாள். உன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கவில்லை, நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப்போல் இயற்கையிலேயே விளையும் செய்கை.சித்தமே ஜடம்.'

இரண்டாவது விஷயம்:-  'நான் பிரிவில்லை என்று கண்டு, தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக "உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்து கொண்டு வரவேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமையுண்டு. பகவான் கர்மயோகி.ஸந்யாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய்யில்லை.மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு.'

'கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக்காது'என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்கிறார்.

'இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை'என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டோர். சோம்பேறிகளாய்ப் பிறருக்கு எவ்விதப் பயனும்இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச் சோறு தின்று கொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச்சேரும்படி நேரிடும்'என்று சில புத்திமான்கள் பயப்படுகிறார்கள். 'அப்படிப் பயப்படஇடம் இல்லை' என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே,நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப் படுத்துகிறேன்.

'தெய்வமே துணை' என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரம் அங்கே யிருக்கும். பரோபகாரமஇல்லாத இடத்தில், "தெய்வபக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆங்கிலேயர், பிரெஞ்சியர், ருஷியர், பெல்ஜியர், செர்வியர், யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர், இத்தாலியர்,ஜப்பானியர், மாண்டிநீக்ரோவர், அல்பானியர், போர்ச்சுகேசியர்,ருமானியர், க்யூபா நாட்டார், பனாமர், கிரேக்கர், சீய நாட்டார்ஆகிய பதினாறு தேசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் சேர்ந்தஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா தேசத்தாருக்கும் விரோதமாகபபோர்புரிந்து வருகிறார்கள். மேன்மேலும் நம்முடைய நேசக் கட்சியாருக்குத்தான் துணை சேருகிறதே ஒழிய, ஜெர்மனிக்குப்புதிய துணை கிடையாது. மேற்கூறிய பதினாறு தேசங்களைத் தவிர, சீனா, ப்ரஜீல், பொலிவியா, க்வாடிமாலா, ஹொண்டூராஸ், நிகராகுவா, லிப்ரியா, ஹெய்தி, ஸாண்டோமிங்கோ முதலிய நாட்டார் மேற்படி ஜர்மானியருடன் தூது சம்பந்தங்களை நீக்கித்தமது விரோதத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் பயப்படாமல் அந்த மானங்கெட்ட ஜர்மனிக்காரப் பயல்கள், நேசக்கட்சியாருடைய நியாயங்களைக் காட்டிலும் தங்களுடைய இரும்பு வலிமையே பெரிய வலிமை என்று எண்ணி, வீண் இறுமாப்புக்கொண்டு சண்டை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.