பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

[வங்க பாஷையில் ஸ்ரீமான் ஸர். ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பெற்று,'மாடர்ன் ரிவியூ' பத்திரிகை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதனின்றும் ஸ்ரீீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்டது.]

மழை கொஞ்சம் தூற 'ஆரம்பித்தால், எங்கள்சந்நிலும், அதுபோய் சேரும் சித்பூரி ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய் விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாய்விட்டேன். சிறுபிராய முதல் இதுவரை, ஒரு முறைகூடத் தவறாமல் வருஷந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி, நிலத்தில் பாதிகுடியிருக்கும் ஜந்துக்களுக்குள்ள யோக்யதைத்தான் நமக்கும் இருக்கிறதென்ற எண்ணம் என் மனதில் அடிக்கடிஉதிப்பதுண்டு.

இங்ஙனம் அறுபது வருஷங்கள் ஆய்விட்டன.இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போதுமின்சார சக்தி கண்டு நகைக்கிறது. கண்ணுக் கெட்டாதிருந்ததுபரமாணு. இப்போது மனதுக் கெட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் போகிற எறும்பைப்போல் மனிதன்சிறகு முளைத்துப் பறக்கிறான். 'வானத்தில் இடம், உனக்கா எனக்கா?' என்று நீதிஸ்தலத்திற்கு வியாஜ்யங்கள் விரைவாகவரக்கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோரும் 'பன்றிக் குடுமி'யை நறுக்கி எறிந்தனர். ஐந்நூறு வருஷத் தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது. ஆனால் இந்தச் சித்பூர்ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமற் செய்ய வழியில்லை அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங்கிரஸ்என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எத்தனை சோகமாயிருந்ததோ, அத்தனை சோகமாகத்தான்இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கி வரும் தருணத்திலும் இருக்கிறது.