பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

நாம் வற்புறுத்தி மேலும் சொல்லத்தக்கதொன்றுண்டு: ஸ்வராஜ்யத்திலிருந்து ஸாமார்த்தியமும்,பாரபுத்தியும் உண்டாவதுடன் உயிருக்கே அதிகபல முண்டாகும். ஒரு கிராமம் அல்லது வகுப்பின் எல்லைக்குள் புத்தியைக் கட்டுப்படுத்தியிருப்போர் அங்ஙனம் இல்லாமல் பெரிய ராஜ்ய சிந்தனையும் அதற்குத் தக்க செய்கையும் பெறுவாரானால், மானுஷீகத்தைப் பற்றி அவர்களுக்கு விரிந்த உணர்ச்சியுண்டாகிறது. இந்த ஸௌகரியம் இல்லாமையால் இந்நாட்டில் ஒவ்வொருவனும் அரை மனிதனாகவே யிருக்கிறான். அவனுடைய யோசனைகளும், சக்திகளும்,ஆசைகளும், முயற்சிகளும் அற்பமாகவே யிருக்கின்றன.இங்ஙனம் வலிய வந்திருக்கும் உள்ளச் சிறுமை உயிர்ச்சேதத்திலும் பெரிய கேடாகும். ஆதலால் தவறுதல் நேரிடக்கூடும் என்பதைப் பொருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம் பெறக்கடவோம். பாதையில் இடறுதல்களை மாத்திரம் கருதி, எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாகாது. இதுவே உண்மையான உத்திரம்."

இந்த மறுமொழியை ஒருவன் அதிகாரிகளிடம்சோர்வில்லாமல், மீட்டுமீட்டும் சொல்லித் தொல்லைப்படுத்தினால அவனை அதிகாரிகள் 'பந்தோபஸ்த்' பண்ணிவைக்கிறார்கள். ஆனால் அவனுக்கு ஸ்வதேசத்தாரின் மதிப்புஉண்டாகிறது. ஆயின் இதே மாதிரி ஜவாப்பை ஜாதிப்புரோஹிதரிடம் சொல்லப்போய், "ஐயரே, இது கலியுகமென்றும், மனிதனுடைய எளிய புத்தியைச் சுயேச்சைப்படி விட்டால் கெட்டுப்போகும் என்றும், ஆதலால் மூளையை உழைப்பதிலும், தலையைச்சாஸ்திரங்களுக்கு வணங்குதலே சிறந்ததென்றும் சொல்லிகிறீர்.இந்த அவமான வார்த்தைக்கு நாங்கள் அடங்கமாட்டோம்" என்று சொன்னால், அவர்களுடைய கண் சிவந்துபோய் உடனே ஜாதியைவிட்டுத் தள்ளும் படி உத்தரவு போடுகிறார்கள். ராஜாங்க விஷயமானால் வானத்தில் பறக்கும்படியாகவும், ஜாதி யாசாரமானால் கட்டையில் காலைக்கட்டிப்போடும்படியாகவும் இவர்கள் விரும்புகின்றனர். வலப்புறம் திருப்பவும் இடப்புறம் திருப்பவும் தோணியிலே சுக்கான்ஒன்றுதான் உண்டு. அது போலே, மனிதன் ராஜ்ய விஷயத்திலும் ஜாதியாசார விஷயத்திலும் இரண்டிலும் உண்மை நிலைபெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்த விதியின் அனுசரணையிலேதான் சித்பூர்ரஸ்தாவுக்கும் சௌரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள பேதம் தோன்றுகிறது. "எல்லாம் அதிகாரி கையில் இருக்கிறது. நம்முடைய கையைக்கட்டிக்கொண்டு நடப்பதே சரி" என்கிறதுசித்பூர் ரஸ்தா. சௌரிங்கி "ரஸ்தாவோ, "எமது கைக்குள் காரியங்கள் அடங்கி நடக்காவிட்டால், நமக்கு கையிருந்து பயன் என்ன?"  என்று கேட்கிறது. தனது கைக்கும் தெய்வத்தின் கைக்கும் சம்பந்தம் உண்டென்று தெரிந்துகொண்டபடியால், 'சௌரிங்கி' உலக முழுதையும் வசப்படுத்திக்கொண்டது. இந்த நம்பிக்கையை இழந்துவிட்டபடியால் 'சித்பூர்'உலகத்தை இழந்துவிட்டது; அரைக் கண் மூடிமவுனியாய், நிஷ்டையின்பங்களை நாடுகிறது.