கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய, நம்முடைய அற்புதமான ஆசாரங்களைத் தவறாமல் அனுசரிப்பது ஸாத்யமில்லை. கண்ணைத் திறந்தாலோ, உலக முழுதையும் ஆளுகிற பொதுவான லோகவிதி நமக்குத் தென்படாமல் இராது. ஒரு கூட்டத்தாரேனும், ஒரு மனிதனேனும், இந்த விதியை வசப்படுத்தினால், அதிலிருந்து அதிகாரம், செல்வம்,விடுதலை என்ற பரிசுகள் கிடைக்கும். இந்த விதியைஉறுதியான அஸ்திவாரமாகக் கொண்டு ஐரோப்பிய நவீனநாகரீகம் நிலை பெற்றிருக்கிறது இதில் நம்பிக்கை யிருப்பதனால், அது பெரிய விடுதலை பெற்று நிற்கிறது.நாமோ கையைப் பிசைந்துகொண்டு, யஜமான் ஆக்கினைக்குக் காத்திருக்கிறோம். வீட்டிலே மூத்தவன், போலீஸ், தலையாரி, கோயில் குருக்கள் முதலியவர்களில்ஏதேனும் ஒன்றைப் பூஜைபண்ணி நம்முடைய சொந்த யோசனையையும், சொந்தச் செய்கையின் திறமையையும்ஆயிரம் தூளாக உடைத்து நான்கு பக்கத்துக் காற்றிலுமவீசி எறிந்து விடுகிறோம். இதற்கொரு காலேஜ் மாணாக்கன், "நாங்கள்இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப்பால் குத்திக் கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோமவிஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை" என்றுசொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்குநாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தி யிருப்பதால், நமதுமனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால்,உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸ்ர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், 'எது வந்துவிடுமோ, நாம் எப்படிஒன்றைத் துணிவாகச் செய்யலாம்' என்று திகைப்பதும் பயத்தின்குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலேஎப்போதேனும் ஓட்டை யுண்டாகி. அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கினியவாகிய ஸ்வதர்மங்களைமறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப் போய், கௌரவத்தைக் காப்பாற்றவேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. தெய்வ விதியைமீறி அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால்கசப்பு இனிப்பாய்விடும் என்று நினைக்கிறார்கள். 'ஸகல ரோகாநிவாரணி' என்று தான் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொது விதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம். உட்காரணம் அற்பத்தனமான "பயமும் தன்னலம் வேண்டலும்;அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர் வழியை விட்டு விலகமுயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்கு, பூஜை நைவேத்தியம் பண்ணி குருட்டு அச்சத்தால், மானுஷீக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பௌதிகசாஸ்திரத்திலும் ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப் பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை.தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால் அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகனாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம்யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல்,உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதலமுதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியேசெய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள். |