பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும்ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத்தகாதென்றும், சண்டாளன்ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால்,வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள். ஏனெனில், எனது கொள்கை 'யஜமான் உத்தர'வுடன் ஒட்டவில்லை. 'ஒட்டாவிட்டால் என்ன குடிகெட்டுப் போயிற்று?''என்று நான் கேட்டால் உடனே என்னை ஜாதியிலிருந்து தள்ளிவிடுவார்கள். என்னை விருந்துக்குக் கூப்பிடமாட்டார்கள். நான் செத்துப்போனால், சாவுக் கிரியைகளுக்குக் கூட வரமாட்டார்கள். இப்படி உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குரூரமான கொடுங்கோன்மை நடப்பதனால் ஜனங்களுக்கு நன்மையென்று நம்புவோர் ராஜாங்கத்தில் கூசாமல் பரிபூர்ண விடுதலை கேட்பது மிகுந்த வியப்புக் கிடமாகிறது. முன்பு, நமது தேசத்திலே, உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிறார்;'தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும்' என்று. இதை நமது முன்னோர் கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது, க்ஷணிகம் அன்று. ஆதலால் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்தவில்லை. எத்தனைக் கெத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிறோமோ, அத்தனைக்கத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கைநூல் (ஸயின்ஸ்) என்று சொல்லப்படும். இந்த 'ஸயின்ஸ்' வலிமையாலன்றோ ஐரோப்பா தற்காலத்தில், "பூமியில் விஷக்காய்ச்சல் இல்லாமல் செய்து விடுவேன். மனிதரின் வீடுகளில் சோற்றுப்பஞ்சமும் கல்விப்பஞ்சமும் இல்லாமல் செய்துவிடுவேன். ராஜ்யத்தின் பொதுநன்மைக்கும் மனுஷ்யனுடைய ஸ்வதந்திரத்திற்கும் முரண்படாமல் செய்வேன்" என்று துணிவுடன் கூறுகிறது. 'அறியாமையால் கட்டும், அறிவினால் விடுதலையும் கைகூடும்' என்பதை முன்னோர் அறிவார். பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்து பிரிவாகக் காணுதல்.உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மையறிவு. 'இத்தனை பெரிய உண்மையை அக்காலத்தில் எப்படிக் கண்டுபிடித்தார்கள்' என்பதை இப்போது நினைக்க வியப்புண்டாகிறது.பிறகு அரண்ய ரிஷிகளின் காலம் மாறி, பௌத்த சந்நியாசிகளின்காலம் வந்தது. மேற்கூறிய மகத்தான ஞானத்தை உலகத்திலிருந்துபிரித்து 'உலகத்தைத் துறப்பதே முக்தி' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். இங்ஙனம் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பந்தமுண்டாய் இடையே பாகச்சுவர் போடப்பட்டது. ஆகவே,இக்காலத்தில் ஜாதியாசாரங்களில் எத்தனை அநாகரீகமும் மடமையும் இருந்த போதிலும், உண்மை கண்டவரின் சார்பிலிருந்து யாதொரு ஆட்சேபமும் பிறக்கவில்லை. உண்மைபபக்கத்தார் இதற்கெல்லாம் இடங்கொடுத்தே பேசுகிறார்கள். மரத்தின் கீழ் இருந்து சந்நியாசி சொல்லுகிறான்:- 'தன்னிடம்உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் காண்பவனே உண்மை காண்பான்' என்று. அது கேட்ட சம்சாரி தன்னிடம்உள்ள சிறந்த வஸ்துக்களை சந்நியாசியின் திருவீட்டுக்குள்ளேபோட்டுவிடுகிறான். ஆனால், தெய்வத்தின் பொது விதிக்குஅடங்கி நடப்போருடைய வீட்டிற்கு வண்ணான், அம்பட்டன்போகக்கூடாதென்று சம்சாரி விதி போடும்போது, சந்நியாசிஅதனை மகமலர்ச்சியுடன் ஏற்றுத் தனது ருஷ்டி மண்சாத்திஆசீர்வதிக்கிறான். இப்படித்தான் நமது ஜாதி வழக்கே கெட்டுப்போயிற்று. உண்மைக்குப் பரிந்து பேசுவோர் யாரும் இல்லாமலேபோய்விட்டது. இதனால் பல நூற்றாண்டு நேர்ந்த அவமானத்தையெல்லாம் நாம் பொறுத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்படிநேரிட்டது. |