ஐரோப்பாவில் அப்படி இல்லை. அங்கேஉண்மையை மனதிற்குள் மறைக்காமல் வழக்கத்திற் காட்டுகிறார்கள். ஜனக்காட்டிலும் ராஜ்யத்திலும் ஏதேனும்குற்றம் வெளிப்பட்டால் அதைப் பொதுஜனங்கள் உண்மைவழக்கால் சோதித்துத் திருத்த வழியுண்டு. இதனால் கிடைக்கும் சக்தியும் விடுதலையும் எல்லாருக்கும் பயன்பட்டுநம்பிக்கையையும் தைரியத்தையும் உண்டாக்குகின்றன. இந்தஉண்மை மாயமந்திர இருளில் மறைந்து கிடக்கவில்லை.திறந்த வெளியில், எல்லோரும் காணும்படி தானும் வளர்ந்துபிறரும் வளரும்படி செய்கிறது. பல நூற்றாண்டு நாம் வாயை மூடிக்கொண்டுஅவமானப்பட்டதெல்லாம் ஒன்றுசேர்ந்து கடைசியில் அந்யராஜ்யமாகப் பரிணமித்தது. கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய்த் தீண்டுவது போலவே நம்முடையகருத்து முழுதும் நம்மை ஆளும் மேற்குத் திசையாருடையராஜ்ய நெறியில் செல்லுகிறது. மற்றதை எல்லாம் மறந்து, 'எங்களுடைய இஷ்டத்தைச் சற்றே கவனித்து எங்களாட்சி நடக்கவிட வேண்டும். வேண்டினாலும் வேண்டாவிடினும், புறத்திலிருந்து விதிநியமங்கள் எங்கள் தலைமேல் பொழியாதுஇருக்கவேண்டும். ராஜ்யபாரம் முழுவதும் எங்களுக்குச் சுமையாகாதபடி, சக்கரங்கள் போட்ட யந்திரமாக்கி அதை உங்களுடன் நாங்களும் சேர்ந்து தள்ள இடம் கொடுக்க வேண்டும். பொறுப்பில்லாத அன்னியரின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்ற பிரார்த்தனை இப்போதும் உலகத்தில் எல்லாத் திசைகளிலும் எழுகிறது. காலசக்தியின் தூண்டுதலால், இந்தப் பிரார்த்தனையில் நம்முடைய வாக்கையும்சேர்த்தது நன்றாயிற்று. அப்படியன்றி இப்போதும் வழக்கம் போல'யஜமானன் 'உத்திரவை' ஒப்புக் கொண்டு நடந்தால் அது நமக்குத்தீராத அவமானமாக முடிந்திருக்கும். இதனால் நம்முள்உண்மையின் ஒரு கிரணம் நுழையக்கூடிய துணை "இன்னும் ஏதோ மிஞ்சி இருப்பதாகத் தெரிகிறது. நாம் பார்த்தது உண்மையின் கிரணம் ஆனபடியாலே தான், நம்மையசையாதபடிபலிமிருகம் போல கட்டிப்போட்டிருந்த வீண்தற்புகழ்ச்சியை நான்நம்பிக்கையுடன் பழிக்கின்றேன். ராஜாங்கத்தாரை நோக்கி 'ஸாம்ராஜ்ய சபைகளில் எங்களுக்கு ஸ்தானம் வேண்டும்' என்றுகேட்பதும், ஜனங்களை நோக்கி, 'ஜாதியாசாரங்களிலும் சொந்தக்காரியங்களிலும்கூட எஜமான் போட்ட கோட்டை மீறி நடக்காதே'என்று சொல்வதும் ஒரேவித கர்வத்தால் உண்டாவது வினோதமன்றோ? |