ஸமயம் (மதம்) வேறு; குருக்கள் 1கட்டுப்பாடு வேறு என்பதை மறக்கலாகாது. அவை ஒன்றுக்கொன்று தீயும் சாம்பரும் போலாம். மதத்தை மீறி, கட்டுப்பாடு சொல்லும் போது நதியை மணல் மூடுவது போல் ஆகிறது. அங்கு நீர்கெட்டுப் பாலைவனம் போல் தோன்றும். 'இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவோர் மிகக் கேடு கெட்டவர்கள்' என்பதுவெளிப்படை. ஒருவன் மற்றொருவனைக் கஷ்டப்படுத்தினால்,இருவருக்கும் கெடுதி என்று (சமயம்) மதம் சொல்லுகிறது. மகள் விதவையாகிப் பட்டினி கிடக்கும்போது'இன்ன திதியில் அவளுக்குத் தாகத்துக்கு ஜலம் கொடுத்தாலபெற்றோர்களுக்குப் பாவம்' என்று குருக்களின் கட்டுப்பாடுசொல்லுகிறது. 'பச்சாத்தாபத்தாலும் ஒருவன் பாபத்தைக் கழுவலாம்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'கிரகணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழுகினால்தான் பாவம் தீர்வதுடன் பதினான்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'மலைகளையும் கடல்களையும் கடந்து போய், இவ்வழகிய உலகத்தின் வியப்புகளைக் கண்டு களிக்கவேண்டும்' என்று ஸமயம் சொல்லுகிறது'கடலைக் கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ணவேண்டும்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. 'எக்குடிப் பிறந்தாலும், உண்மையுடையவன் தொழத்தக்கவன்' என்று ஸமயம் சொல்லுகிறது. 'பிராமணனாகப் பிறந்தவன் அயோக்கியனாக இருந்த போதிலும் அவன் பாத தூளை, பிறர்சிரத்தில் தரிக்கலாம்' என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. சுருக்கிச்சொன்னால், ஸமயம் விடுதலை போதிக்கிறது; குருக்கள்கட்டுப்பாடு அடிமை நிலையைப் புகழ்ந்து கீர்த்தனம் பாடுகிறது. பக்தி குருட்டுப் பக்தியாக இருந்தாலும் அதிலொருவெளியழகுண்டு. இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும்அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள். சித்திரக்காரன் ஒருவன் இடிந்த வீட்டின் புராதன அழகுகளைப் பார்த்து மயங்கி, 'அதில்குடி இருக்க யோக்யதை இல்லை' என்பதை மறந்துவிடுவது போலே கங்கா ஸ்நானத்துக்குத் திருவிழாக் காலத்தில் பாரிஸால்நகரத்திலிருந்து ஆயிரக் கணக்கான யாத்திரைக்காரர் - பெரும்பகுதி ஸ்திரீகள் - வருவதைப் பார்த்திருக்கிறேன். அடடா! புகைத் தோணியிலிருந்து புகை வண்டிக்கும் புகைவண்டியிலிருந்து புகைத்தோணிக்கும் மாறுகிற கூட்டங்களிலஎல்லாம் அவர்கள் படும் கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும்ஓய்வில்லை. அவர்களுடைய பரிதாபத்துக்கிடமான பொறுமையிலும் ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது.அவர்களுடைய துயரங்கள் எப்போதும் அழகு பெறுகின்றன.வீண் கிரியை சடங்குகளுக்கு இடையே அவர்கள் வளர்க்கும்பிள்ளைகள் இவ்வுலக இன்பங்களுக்குப் பல்லைக் காட்டியிருந்துபரலோக நிழல்களைக் கண்டு நடுங்குகிறார்கள். தாம் நடக்கும்பாதையில் வளைவுதோறும் தாமே தடைகள் கட்டுவது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரே தொழிலாகக் காணப்படுகிறது. அத்தடை உயர்வதையே அபிவிருத்தி என்று கருதுகிறார்கள். |