பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

இப்படி அவர்கள் தண்டனை அடையுமகாரணம் யாதெனில், ஈசனால் மனிதனுக்குக் கிடைத்தபேறுகளில் சிறந்தபேறாகிய தியாக சக்தியை இவர்கள்துர்விநியோகம் செய்கிறார்கள். கணக்குக் காட்டும் காலம்வரும்போது இவர்களால் நஷ்டக் கணக்குத்தான் காட்டமுடியும். இன்னும் ஓர் இடத்தில் லக்ஷக்கணக்கான ஜனங்கள்,ஆணும் பெண்ணுமாக ஸ்தல தரிசனம் செய்து புண்ணியம்தேடப்போயினர். பாதையோரத்தில் ஒருவன் சாகக் கிடந்தான்.அவனுடைய ஜாதி இன்னதென்று தெரியாத காரணத்தால்,அவனுக்கு யாரும் தாகத்துக்கு ஜலம் கொடுப்பாரில்லை.பெருஞ் செலவு செய்து புண்ணியம் தேடப்போகும்இவர்களுடைய குருட்டுப் பக்தி எத்தனை அழகாகத் தோன்றியபோதிலும் இவருடைய காருண்யம் எத்தனை பயங்கரமானதுபார்த்தீர்களா! ஒரு தண்ணீரில் அனைவரும் சேர்ந்து விழும்படிதூண்டுகிற குருட்டுத் தன்மைதான், இனம் தெரியாத மனிதர்கஷ்டப்படும் போதும் இரக்க முண்டாகாமல் செய்துவிடுகிறது.தான் கொடுத்த சிறந்த வரத்தை இவர்கள் இங்ஙனம் துர்விநியோகம் செய்வதில் ஈசனுக்குத் திருப்தியில்லை.

படிப்பு, பக்தி, ஒழுக்கம் மூன்றும் இல்லாத கோயிற்குருக்களுடைய காலில், ஸ்திரீகள் பணத்தைக் கொட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இங்ஙனம் செய்யும்வன்மையால் இவர்கள் உண்மைக்கும் கருணைக்கும் அருகே ஓர் அடியளவேனும் நெருங்கி வந்தனரா?  இல்லை.

இங்கு ஓராக்ஷேபம் சொல்லலாம்:-  "குருபுண்ணிய ஆத்மா என்று நம்பித்தானே பணம் கொடுத்தார்கள்.இந்த நம்பிக்கை அவர்களுக்கில்லாவிட்டால் மேற்படிபணத்தைச் செலவின்றி வைத்திருப்பார்கள். அல்லது சொந்தச்செலவுக்குச் செலவிட்டிருப்பார்கள். குருவின் கையில் கொடுத்தது விசேஷந்தானே?" என்று கேட்கலாம். தனக்காகச்செலவிட்டால் பணத்தின் பயனாவது கண்டிருப்பார்கள். தெய்வ பக்தியினால் செய்தோமென்ற பொய்மயக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டார்கள்.

வெளியே ஒரு நாயகனுடைய ஆக்கினைக்குஅஞ்சித்தன் உயிரை இழக்கத் துணிபவன் தனக்குத்தானே நாயகனாகும்போது, தர்மத்துக்காக உயிர் கொடுக்காமல் போகிறான்.

இங்ஙனம் நமது கிராமங்களில், ஆரோக்கியம்,கல்வி, உயிரின்பம் யாவும் வற்றிப் போய்விட்டன. 'கிராமத்தார் தம்முடைய சக்திகளைத் தாம் அறியும்படி செய்தாலொழிய அவர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லை'என்று கருதி நான் ஒரு கிராமத்தில் பிரயத்தனம் செய்தேன்.அந்தக் கிராமத்தில் ஒரு பக்கத்துக்கு ஜலம் ஒரு துளிக்கூடக்கிடையாது. தீ பிடித்தெரிந்தது. தழல் வீசி எரிகையிலே, கிராமத்தார் கூடியழுவதை யொழிய வேறொன்றும் செய்யமாட்டாமற் போயினர். நான் அவர்களிடம் சொன்னேன்:- "நீங்கள் பிரயாசை கொண்டு கிணறு தோண்ட இணங்கினால்கல் சுண்ணாம்புக் கிரயம் நான் கொடுக்கிறேன்" என்றேன்.கஷ்டத்தில் பாதி அவர்களுடையதாகவும் புண்ணியம்முழுவதையும் நான் கொள்ளையிட விரும்பிய தந்திரத்தைமெச்சித் தங்களால் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அந்தக்கிணறு இன்னும் தோண்டியாகவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் இங்கே தீராமலேதான் இருக்கிறது. அக்நி உத்ஸவம் அடிக்கடிநடந்து வருகிறது.