ஆகவே நமது கிராமக் கஷ்டங்கள்தீராமல் இருப்பதன் காரணம் யாதெனில், ஒரு காரியம்செய்வதற்கு மோக்ஷ புண்ணியத்தை விரும்பிச் செய்தாலொழிய வேறு வழியில்லை. ஆகவே, ஒவ்வொருகுறையும் தெய்வந்தானே வந்து தீர்க்க வேண்டும்; அல்லதுமோக்ஷத்தை வேண்டி யாராவது செய்தாலுண்டு. மற்றபடிதாகத்துக்கு ஜலம் இல்லாமல் செத்தாலும் சாவார்களேயன்றி,கிராமத்தார் தாமாக ஒருகிணறு தோண்டிக் கொள்ளமாட்டார்கள்.இதற்குக் கிராமத்தாரைக் குறை கூறுவதிற் பயனில்லை. 'மாமூல் கிழவி' அபினி கொடுத்து அவர்களைப் பாதிததூக்கத்தில் வைத்திருக்கிறாள். ஆனால், படித்த பிள்ளைகள்அந்தக் கிழவியின் ஸ்துதியைப் பாடக் கேட்கும்போது, எனக்குஆச்சர்ய மிகுதியால் பேசமுடியாமல் போகிறது. "ஆஹா; இந்தககிழவி எத்தனை நல்ல மருத்துவச்சி; இவள் கைக்குள் நமதுதேசம் இருப்பது மஹிமையன்றோ! இவள் மடியிலிருந்தபடியேநமக்கு ஸ்வராஜ்யச் செங்கோலும் கிடைத்து விட்டால், எத்தனைநன்றாக இருக்கும்!" என்கிறார்கள். பட்டினி, தொத்து வியாதி, பஞ்சம், - இவை தலைதூக்கி ஆடுகின்றன. நம்மைப் புலியும் திருடரும் அடிக்காமற்காத்துத் துப்பாக்கி வைத்துக் கொள்ளும்படி ராஜாங்கத்தார்அனுமதி கொடுக்காமல் இருப்பது போலவே, மேற்கூறியதுன்பங்களைத் தடுப்பதற்குரிய உபாயங்களைத் தேடவொட்டாமல் ஜாதியாசாரத் தலைவர் தடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் நம்மிடையே 'தற்காப்புக்கு நீங்கள் கருவிகள்தேடலாமே. நீங்கள் ஸயின்ஸ் படித்து அதைத் தற்காப்புக்குஉபயோகப்படுத்தக் கூடாதென்று யாவரும் தடுப்பாரில்லையே"என்று கூறலாம். உண்மைதான். 'தற்காப்புக்குரிய ஆயுதங்கள் நமக்குக் கிடைக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள் எனில் அதிசயோக்தியாகும்.ஆனால் அவற்றில் பயிற்சி பெற இடமில்லாமல் செய்வதற்குவேண்டிய முன் ஜாக்கிரதை எத்தனை உண்டோ அத்தனையும்பண்ணி வைத்திருக்கிறார்கள். நமது தேசத்தார் ஒரு பக்கம்,இராஜாங்கத்தார் ஒரு பக்கமாக, நம்மைச் சூழ ஏற்படுத்திஇருக்கும் எண்ணற்ற விதிகளைக் கடக்கக் கூடாதென்றபயத்தினால் நாம் சக்தி இழந்து, நம்மிடம் துப்பாக்கி இருந்தால்,திருடரால் ஏற்படும் விபத்தைக் காட்டிலும் துப்பாக்கியால்அதிக விபத்து நமக்கே உண்டாகும் போல் இருக்கிறது. |