இந்தக் கஷ்ட தசையில் நாம் இருப்பதற்கு அன்னியர் அரசாட்சியே காரணம் என்றுசொல்லும் கக்ஷியை இப்போது ஆராய்ச்சி செய்வோம்.பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வேர்க்கொள்கை யாதெனில் 'ஜனங்கள்ஆட்சியில் கலக்க வேண்டும்' என்பதேயாம். அன்னியர் யாரும்பொறுப்பின்றி அரசு செய்யும் முறைமையை அக்கொள்கைகண்டிக்கிறது. நம்மிடம் இந்த விஷயத்தை அவர்கள் மறைக்கவில்லை. ஸர்க்கார் பள்ளிக்கூடங்களில் இதை நமக்குப்பஹிரங்கமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைப்பரீக்ஷைக்கு உருப்போடுகிறோம். இந்த அறிவை இனி நம்மிடமிருந்து பறிக்கஇடமில்லை. நம்முடைய காங்கிரஸ் சபைகளும் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதாரமாக உடையன. ஐரோப்பிய ஸயின்ஸ் தன் இயற்கையாலேயே எல்லாருக்கும் கிடைக்கத்தக்கதாக இருப்பதுபோல், மேற்படி பிரிட்டிஷ் ராஜ்யக் கொள்கையும் தன் இயற்கையாலேயே பாரத தேசத்துஜனங்களின் அங்கீகாரத்ை"வேண்டுகிறது. ஹிந்து தேசத்துப்பிள்ளைகளுக்கு ஐரோப்பிய ஸயின்ஸ் கற்றுக் கொடுக்கக்கூடாதென்று சொல்லும் ஆங்கிலேயர், ஒன்று, அல்லது பத்து,அல்லது ஐந்நூறுபேர் இருக்கக்கூடும். ஆனால், அந்த ஸயின்ஸ் (சாஸ்திரமோ) பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும் வந்து தன்னைப் படித்துப்பயன் பெறும்படி கூவியழைத்து, அவ்வாங்கிலேயரை அவமானப்படுத்தும். அதுபோல், ஐந்நூறு அல்லது ஐயாயிரம்ஆங்கிலேயர் பிரசங்கங்களிலும் பத்திரிகைகளிலும் ஹிந்துதேசத்தார் ஸ்வராஜ்யம் பெறுவதைத் தடுக்க வேண்டுமென்று உபந்நியஸித்தாலும், பிரிட்டிஷ் ராஜ்ய கொள்கையானது பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும்தன் பக்கம் சேரும்படி கூவி இவ் வாயிரக்கணக்கான ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தையை இகழ்ச்சிக்கு இடமாக்குகிறது. 'பிரிட்டிஷ் கொள்கைகள் நம் போல்வார்க்குததகுதியில்லை' என்ற அநாகரீகமான மறுமொழி சொல்லக்கூடும்.பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும் சூத்திரனுக்குக் கிடையாதென்று முன்பு பிராமணர் விதிபோட்டது போலேதான். ஆனால், பிராமணன் தனது ஸ்தானத்தைமுன் ஜாக்கிரதையலே கெட்டிப்படுத்திக் கொண்டான். புறத்தைஒடுக்கு முன்பு ஜனங்களின் அறிவை ஒடுக்கி விட்டான். அறிவின்வேர்களைச் சூத்திரனிடமிருந்து பறித்து விட்டபடியால் இவன் ஸ்வதந்தர கார்யம் செய்ய ஸாத்தியப்படவில்லை. பிறகுசூத்திரனுடைய தலை பிராமணனுடைய பாததூளியிலேஈடுபட்டிருப்பதை ஸாவதானமாகக் காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை ஆயிற்று. ஆனால் நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் விடுதலைக்கு வழிகாட்டும் அறிவுக்கதவை முற்றிலும்அடைத்துவிடவில்லை. அதிகாரிகளுக்குப் பச்சாத்தாபம் உண்டாய்,இங்கொரு கதவை அங்கொரு கதவை அடைப்பதாகிய முயற்சியைமிகத் தாமஸமாகக் கைக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும்,'சுகத்தை உத்தேசித்துத் தர்மத்தைக் கைவிடுதல் ஆத்ம சக்திக்குவழியில்லை' என்பதை அவர்களாலே கூட மறக்கலாவதில்லை. |