பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

பிரிட்டிஷாருடைய உட்குணத்தில் நம்ஸ்வதந்திரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஸந்தோஷகரமான உண்மையை நமது முழுவலிமையுடன்புத்தியில் நிறுத்திக் கொண்டோமானால், அது நிறைவேறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுதல்எளிதாகும். பழைய சாத்திரப்படி "அடங்கி நடப்பதை"க்கைப்பிடித்தோமோனால், நமக்கு மகத்தான ஆசாபங்கம் நேரிடும். இரண்டு வகைகளில் ஏற்கனவே இது வெளிப்பட்டுநிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் கொடுஞ் செயல்கள் ஒருவகை, நம்முடைய கூட்டத்து ராஜ தந்திரிகள் தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்றொரு வகை. "இந்த வைஸ்ராய்நல்லவரா?  அந்த வைஸ்ராய் நல்லவரா?  'மார்லி' வந்தால்நமக்கு நிறையச் சீர்திருத்தம் கிடைக்குமா கிடைக்காதா?வீட்டுப் பூனை காட்டுக்குப் போனால், காட்டுப் பூனைபோலேகாட்டுத் தனமாய் விடுமா, ஆய்விடாதா?"

இருந்த போதினும், நாம் மானுஷ்ய ஜாதியினிடம்அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத்தின்அதன் வலிமை ஒன்று மாத்திரமே பெரிதன்று. அதன் அஸ்திவாரக் கொள்கைகள் அதனிலும் பெரியன என்பதைநாம் மனதார ஒப்புக்கொள்ளுகிறோம். அடிக்கடி இதற்குவிரோதமாக நடக்கக்கூடும். 'லோபம், அதிகார விருப்பம்,கோபம், பயம், கர்வம், இவை எல்லாம் தொழில் செய்வதைநாம் பார்க்கலாம்' என்பது மெய்தான். மஹிமையும், தீரமும்,விரதமும், பக்தி விசுவாசங்களும் உடையவராகிய ராஜ ஜாதியாரிடத்தில் உள்ள நல்ல அம்சங்களுடன் நாம் ஒட்டலாம்.அங்கே சத்துருக்கள் நம்மை எங்ஙனம் தாக்கிய போதிலும்,நாம் வெற்றி பெறுவோம். நினைத்த பொழுதெல்லாம், புற வெற்றி கிடைக்காவிடினும், அகவெற்றி நிச்சயம். நாம்அற்பர்களாய்ப் பயம் கொண்டிருந்தால், நம்மை ஆளுவோரின்பெரிய கொள்கைகளையெல்லாம் நமது மட்டம் ஆக்கிவிடுவோம். அவர்களுடைய கெட்ட குணங்களே தலை தூக்கஇடங்கொடுப்போம். பிராமணன் தன்னைக் கீழ் ஜாதி என்பதைச்சூத்திரன் எப்பொழுது ஒப்புக்கொண்டானோ, அப்பொழுதுபிராமணனுக்குப் பள்ளம் தோண்டியாய் விட்டது. எளியவன்வலியவனுக்குச் செய்யும் தீமை, வலியவன் எளியவனுக்குச்செய்யும் பகைமைக்கு நிகராகக்கூடும். ஒருமுறை ஒரு உயர்ந்தஸர்க்கார் உத்தியோகஸ்தர் என்னிடம், "போலீஸ் கொடுமையைப்பற்றி எப்போதும் முறையிடுகிறீர். என் மட்டில், நீங்கள்சொல்வதை நம்பக்கூடாதென்ற எண்ணமில்லை. ஆனால்,பெயர்வழி, விஷயம் எல்லாம் கொண்டுவந்து ருஜுப்படுத்தும்"என்றார். உண்மைதான். எல்லா அநியாயங்களையும் பஹிரங்கமாகத் தூற்றி, உலகறிய மீட்டும் மீட்டும் முறையிடத்தக்க தைரியவான்கள் சிலரேனும் நமது தேசத்துக்குவேண்டும். ஆனால் அற்பப் போலீஸ் சேவகனாக இருந்தபோதிலும் அவன் பின்னே பூதாகாரமான ராஜ்யாதிகாரம்ஒன்றிருக்கிறது. அவன் மேல் குற்றஞ் சாராதபடி காப்பாற்றுவற்காகப் பொதுப் பணத்திலிருந்து ஆயிரக் கணக்காகச் செலவு "செய்யக் கூடுமென்ற பீதியை மறுக்கமுடியாது. நம்மைநசுக்கினால் பொறுத்துக் கொண்டிருப்பதே நம் உடம்புக்கு நல்ல தென்று சில அதிகாரிகள் சொல்வது நல்ல மாதிரிதானே?இல்லாவிட்டால் அதிகாரிகளுடைய "ப்ரெஸ்டிஜ்" (கௌரவம்)குறைந்து போகாதோ?  "ப்ரெஸ்டிஜ்" நம்மைப் பயமுறுத்தினபழம் பூச்சாண்டி; எப்பொழுதும் நம்முடைய செவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகன்; பேஹிலா காவியத்திற்குரியமாநஸா கவி சங்கனுடைய சண்டி; அதன் பூசைக்குப் போகையில் தர்ம நியாயங்களை அவமதித்து இடறிக் கொண்டுபோகவேண்டும்; இல்லாவிட்டால் அது நம்மை இடறும். எனவே, "ப்ரெஸ்டிஜ்" தேவதைகளுக்கு நமஸ்காரம் போடு.