பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

யா தேவி ராஜ்யசாஸனே        'ப்ரெஸ்டிஜ்' ரூபேண ஸம்ஸ்திதா        நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை        நமஸ்தஸ்யை நமோ நம:

ஆனால் இது வெறும் அவித்தை; மாயைதவிர வேறொன்றும் இல்லை. நம்முடைய புறக் கண்ணுக்குத்தோன்றிய போதிலும் நாம் அதை நம்பக்கூடாது. உண்மைஅதன் பின்னே நிற்கிறது. அது யாதெனில் "நம்முடையஆட்சி, நம்முடைய விவகாரம்" இந்த உண்மையிலேதான்பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவே நமக்குப்பலம். பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவேநமக்குப் பலம். பிரிட்டிஷ் கொள்கைகளை நாம் தைரியமாக நம்பாவிட்டால், போலீஸ் நம்மை நசுக்கிக் கொண்டேதான் இருக்கும். மாஜிஸ்ட்ரேட்டால் நம்மைக் காகவும் முடியாது; "ப்ரெஸ்டிஜ் தேவதை மனுஷ்ய பலிகேட்டுக் கொண்டே இருக்கும். இங்கு சிலர்:-  "பலத்தைக் காட்டிலும் தர்மம் பெரிதன்று; பரமார்த்திகமாகப் பேசலாமே யொழிய, நடையில்வெளியிட்டால் ஆபத்து வரும்" என்று கூறி ஆக்ஷேபிக்கலாம்ஸங்கடம் வரக்கூடும். இருந்தாலும், நாம் நம்பிக்கைப்படி செய்யவேண்டும். 'ஸ்வதேசத்தாரே "லஞ்சம் வாங்கிக் கொண்டும், பயந்தும் உமக்கு விரோதமாக ஸாக்ஷி சொல்வார்களே" என்றுசொல்லக்கூடும். இருந்தாலும், உண்மை யென்று கண்டு கொண்டதை வெளியிட்டுச் சொல்ல வேண்டும். ஸ்வதேசத்தாரேஉம்மை மறந்து நின்று தலையில் அடிப்பார்களே. லஞ்சத்தையும்ஸ்தியையும் வேண்டிச் செய்யலாம்; எனினும், நாம் உண்மையை நம்பவேண்டும். "அவ்வளவு தூரம் நம்பலாமா?"சரியாக, அவ்வளவு நம்பியாக வேண்டும்; துளி குறைந்தாலும்போதாது.

ராஜாங்கத்தாரிடம் பெரிய விஷயங்கள் கேட்கிறோம்.ஜனங்களுக்குப் பெரிய வரங்கள் தரவேண்டும். இல்லாவிட்டால்ராஜாங்கத்தாரிடம் செய்யும் பிரார்த்தனை பயன்படாது.

'எல்லோருமே வீரர் அல்லர்; பயந்தவர்கள் உலகத்தில் உண்டு' என்பதை நான் அறிவேன். இருந்தாலும்,எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலங்களிலும் சிலர் தமதுஜாதியின் இயற்கைப் பிரதிநிதிகளாகப் பிறந்து தேசத்தின் கஷ்டங்களைத் தாம் பொறுக்கிறார்கள். எதிர்ப்பை எல்லாம் வெட்டிப் பாதை போட்டு, மற்றவர்பின் வருவதை எளிதாக்குகிறார்கள்; மனுஷ்ய ஜாதிகளின் வெளிநடைகளில் எத்தனை விபரீதங்கள் இருப்பினும், அவற்றைப் பொருட்டாக்காமல் அதனிடம் நம்பிக்கை செலுத்துகிறார்கள்;நிஜாந்தகாரத்தினிடையே கண் விழித்து உதயம் வருமென்றுகாத்திருக்கிறார்கள். கோழைகளின் பயத்தை நகைத்து,

ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய       த்ராயதே மஹதோ பயாத்