அதாவது, "இந்தத் தர்மத்தில் சிறிதளவுபெரிய பயத்தினினுறும் காப்பாற்றுகிறது" என்ற, வாக்யத்தை உரைக்கிறார்கள். ராஜ்யத்தில் உண்மை அம்சம்உண்டானால் அதை வணங்குவோம்; பாபத்தை வணங்கோம், பயத்தை வணங்கோம். ஒருவனுடைய குழந்தைக்கு உடம்பு சொஸ்தமில்லை; ஐரோப்பிய டாக்டருக்கு பெரிய தொகைகொடுத்து வரவழைத்தான்; டாக்டரும் நாட்டு மந்திரவாதியைப் போல உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினான்; "சிகிச்சை செய்யும்; இந்தக் காரியத்துக்கு உம்மை அழைக்கவில்லை" என்று இவன் சொன்னான்;டாக்டர் கோபத்துடன், 'உனக்கென்ன தெரியும்? நான்வைத்தியன்; நான் எது செய்தாலும் அதுவே வைத்தியம்' என்றான். அப்போது இவன் 'உன்னைக் காட்டிலும் உன் தொழிலே பெரிது. நான் பணம் கொடுத்தது தொழிலைக்கருதி, என்கிறான். டாக்டர் இவனை அடித்துக் கீழே தள்ளிபபணத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு"போவதாக பாவனைசெய்து கொள்வோம். அவன் வண்டி சவாரி செய்துகொண்டுவீட்டுக்குப் போகையில் அவன் மனமே அவனைச் சீயென்றுசொல்லாதா? அதுபோல, இப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின்உத்தரவுகளுக்கு உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின் ராஜ்யக்கொள்கைகளை நான் அங்கீகாரம் செய்வதை உத்தேசித்துஒருவேளை இன்று என்னை அதிகாரிகள் கஷ்டப்படுத்தலாகும்;ஆனாலும், எனக்கு நாளை வெற்றியுண்டாகும். நூற்றைம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபிறகு, இன்று சென்னை மாகாணத்தாரின் கஷ்டங்களுக்கு வங்காளத்தார் இரக்கப்படக் கூடாதென்று கட்டளை போடுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் முதலாவது நன்மை என்னவென்றால், 'அதனால் பம்பாயும், சென்னைப் பட்டணமும், வங்காளமும், பஞ்சாபும் ஐக்கியப்பட்டு வருகின்றன,என்று சொல்லக் கேள்வியுண்டு. மேற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் பெல்ஜியத்துக்காகவும் பிரான்ஸுக்காகவும் இரத்தத்தை சிந்தி யமனை எதிர்க்கிறார்கள் என்றும் வதந்தி.அதே மூச்சிலே சென்னைப்பட்டணத்தாரின் சுகதுக்கங்களைவங்காளத்தார் கவனிக்கக் கூடாதென்று சொல்லலாமா? அதைஎத்தனை உரக்கக் கூறிய போதிலும், மனதிற்குள்ளே வெட்கம்உண்டாகாதோ? அதிகாரிகளின் ரஹஸ்ய லஜ்ஜைக்கும் நம்முடையபஹிரங்க உல்லங்கனத்துக்கும் இடையே ஒரு பாலம் போடவேண்டும். இங்கிலீஷ்காரர் இந்தியாவிற்கு கொடுத்த வாக்கினால்கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாகரீகத்தின் பிரதிநிதியாகியஇங்கிலாந்து இந்தியாவிற்கு வந்தது பிரதிநிதியாகிய இங்கிலாந்துகொடுத்த வாக்குறுதியே மேற்படி ஐரோப்பிய நாகரீகத்தின் ஞானமந்திரம். இதுவே அவர்களுடைய ராஜ்யத்துக்கு பலம். இதைமஹிமைப்படுத்துவோம். 'இந்தியாவை நசுக்கும் பொருட்டுஆங்கிலேயர் இங்கு வரவில்லை' என்பதை அவர்கள் மறக்கநாம் இடங்கொடுக்கமாட்டோம். |