ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குபெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும்கொடுக்கத்தக்கது, லோபத்தினால் தனக்கே நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாக தெய்வம் இங்கிலாந்தைநம்முடைய கரைகளில் கொண்டுவந்து சேர்த்தது. இந்தக்கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவதுநம்முடைய கடமை. ஒரு பாலார் தம்முடைய கடமையைச்செய்யாவிட்டால், இருபாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும்உண்டாகும். இங்கிலீஷ்காரர் தம்முடைய தேச சரித்திரத்தைத்திருஷ்டாந்தமாகக் காட்டி, "நாங்கள் நெடுங்காலம் போராடிஉழைத்ததன் பயனாக மிகவும் தாமஸமாகவே எங்களுக்குஸ்வராஜ்யம் கிடைத்தது" என்று சொல்லக்கூடும். இருக்கலாம்!வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்னே வருகிற ஜாதிக்குசுலபம். திருஷ்டாந்தமாக, அமெரிக்காவில் வங்காளிமாணாக்கர்கள் தாமே யந்திரங்கள் செய்கிறார்கள். அதற்காகஆதி காலத்தில் அடுப்புச் சட்டியிலிருந்து நீராவிக் கருவிதோன்றிய நாள் முதல் இன்று வரையில் படிப்படியாக வந்த நூறு ஆண்டு காலம் இவனும் படித்துக்கொண்டு வரவில்லை.ஐரோப்பாவில் பலகாலம் வளர்ந்த பயிரை ஜப்பான் ஒருக்ஷணத்தில் கொண்டுபோய் வைத்து நேரே பயிரிட்டு வருகிறது.ஸாமர்த்தியம் குறைவென்றால், அதற்கு விரைவாகவே ஸ்வராஜ்யவழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். 'ஒருவனிடம் ஒரு திறமைஇல்லை' யென்று நாம் முன்னதாகவே தீர்மானம் செய்தால்,அப்படியே இல்லாமல் போகும். அவன் திறமை நம்முடையகண்ணுக்குத் தெரியாமலே போகும். நம்மவரை நாமே இகழ்ந்து,அவர்களிடம் நம்மை பிறப்பதை நாம் தடுத்து அவர்களை உலகம் இகழவைத்தால், அதைவிடப் பெரிய குற்றம் வேறொன்றும் இல்லை. சரித்திரத்தில் ஸூர்யோதயமாகிறபோதுகிழக்கே ஒளி ஊர்ந்தூர்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத்திசையையும் உடனே நிரம்பச் செய்யும். 'உலகத்து ஜாதியார்அங்குலத்தின் மேல் அங்குலமாக மேன்மைக்கு நகர்ந்துதான்செல்லவேண்டும்' என்று விதிபோட்டால் எந்த ஜாதிக்கும்மேன்மை நேரிடாது. தகுதி உண்டான பின்புதான் விடுதலையைவிரும்பலாமென்று விதி போட்டால், எந்த ஜாதிக்கும் விடுதலைஉண்டாயிராது. ஐரோப்பியர் தம்முள் ஜனாதிகாரம் உண்டென்றுபுகழ்ச்சி சொல்லிக் கொள்கிறார்கள். ஐரோப்பியர் அமெரிக்கர்வெளி டம்பத்துக்குள் மறைந்துகிடக்கும் அழுகற்சேற்றை கீறவிரும்பவில்லை. இவர்களுக்குத் தலை அதிகாரமாக ஒன்றைநாட்டி, மேற்படி சேறு முழுதும் கழுவின பிறகுதான், ஜனாதிகாரம் நடத்தலாமென்று விதி போட்டால் சேறும் நீங்காது;நீங்குமென்ற நம்பிக்கைக்கும் இடமிராது. |