பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

இப்படி நமது ஜாதியாசாரங்களிலும்,தனி நாட்டங்களிலும், பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நான் மறைக்க விரும்பினாலும்என்னால் முடியாது. எப்படிக்கும் நம்மை நாமே ஆளவேண்டும். ஒரு விளக்கு மங்கினதைக் குறித்து,மற்றொரு விளக்கை ஏற்றாமல் தவிர்க்கவிடலாகாது. மனுஷ்யஜாதி மொத்தத்துக்கே பெரிய திருவிழா நடக்கிறது. எல்லாநாட்டு விளக்குகளும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊர்கோலம் முன்னே செல்லுகிறது.நம்முடைய விளக்குச் சற்றே அவிந்தால் இங்கிலாந்தின் விளக்கிலே சற்று பற்றவைத்துக் கொள்ளலாகாதோ? இதற்கேன்கோபம்? இதனால் பிரிட்டிஷ் ஒளி குறையாது. உலகத்தின்ஒளி அதிகப்படும்.

திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது.பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா?  சிறு பணக்காரர்வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். ஆஸ்திரேலியாவும்,கனடாவும் வந்தால் எதிர்கொண்டழைத்து நல்வரவு சொல்லுவான்.திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலேபாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.

பிரிட்டிஷாரும் நாமும் கலந்து இக்காரியம்செய்யவேண்டும். வங்காளிகளிடம் எனக்கு நம்பிக்கைதான்.வாலிபர் கிழவேஷம் போட்டுக்கொண்டு கீழ்ப்பார்வை பார்க்கக்கூடாது. ஆங்கிலேயருக்குள் சில மஹாத்மாக்கள் தோன்றிஇங்கிலாந்தின் சரித்திரப் பயனை நாமும் அனுபவிக்கும்படிபேசி சில ஜனங்களிடம் அவமானப்படுகிறார்கள்.

இந்தியாவிலும் பிறர் சினத்தையும் தமர் நகைப்பையுங் கருதாமல், தோல்விக் கஞ்சாமல், ஆண்மை காட்டும் ஆண் மக்கள் வேண்டும்.

நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித்திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப்பொழுதுவெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம் என்ற தளைபூண்டு புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகாரநித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்தஈசன் கூறுகிறான்.

அடிமேல் அடியடித்து "ஆத்மா நம் வித்தி","தன்னை அறி" என்கிறான்.

காலத்துக்கு முந்தியே கிழவனாகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச்சுமையால் முதுகு வளைந்துபோய்,தன்னைத் தான் நம்பாத கோழையே, கேள்!