பக்கம் எண் :

ஓம் சக்தி - புராணங்கள்

எனவே, வேதத்தின் வழி நூல்களாகியபுராணங்களில், இக் கடவுளை உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றைஅனுஷ்டிக்கும் நெறிகளும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறிகளும் இந்தக் குணங்கள்ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டூரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவமைக் கதைகளாலும் உபதேசங்களாலும் விஸ்தாரமாகக்காட்டப்பட்டிருக்கின்றன.

உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்கள் அதாவது குணபேதங்களைச் சிறப்பாகக் காட்டவேண்டி, சில இடங்களில்அக்கினியையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ஙனமேமற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியைஅனுசரித்து, புராணங்களும் சில அக்கினியை மேம்படுத்தியும்சில விஷ்ணுவை மேம்படுத்தியும் சில சிவனை மேம்படுத்தியும்காட்டுகின்றன.

ஆயினும், கால நடையிலே இப்புராணங்களைமாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடையதேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும்குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷஉரிமையாகக் கொண்டாடப்பட்டது. இதனால் பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய் விட்டது. புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதை யொட்டி, மத பேதங்கள் கட்சி பேதங்களாகி முடிந்தன. இதனால் வைதிக மதமாகிய ஹிந்துமதம்பல பிரிவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்துஅரசர்களின் கொள்கை-இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத பேதங்களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின. பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசியபோதிலும், நடையிலே ஹிந்து மதஸ்தர்களதத்தம் புராணங்களையே தலைமையாகக் கொண்டு அவற்றின்கருத்துக்குத் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்யலாயினர். தம் தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதின்உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரியஅஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த "மூர்த்திகளைஇழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன்என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்தமூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம்முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன்,இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் தூஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக் காலத்து ராஜாக்கள் ஜனங்களின்கோட்பாடுகளை உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங்களில் சிவ தூஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன.