பக்கம் எண் :

மாதர் - பெண்

வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராயஅய்யர் என்றொரு  பிராமணர் இருக்கிறார்.  இவர் சாக்தமதத்தைச் சேர்ந்தவர். ''சக்தி பூஜை''  பண்ணுவோரில் சிலர்மதுமாம்ஸ  போஜனம் செய்கிறார்கள். இந்த  வாத்தியார்அப்படியில்லை. இவர் ''சுத்த சைவம்''. அதாவது ஆட்டுக்குட்டியை மாம்ஸம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம்.இவர் வார்த்தியாரை மாம்ஸம் தின்னம்படி செய்ய முடியாது.இவர் இங்கிலீஷ், ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும்நல்ல பாண்டித்யமுடையவர். கொஞ்சம் ஸமஸ்கிருதமும்தெரியும். பகவத்கீதை, வால்மீகி ராமாயணம், குமாரஸம்பவம்மூன்று நூலும் படித்திருக்கிறார். வேதாந்த விசாரணையிலேநல்ல பழக்கமுண்டு. கதை, காலக்ஷேபம், உபந்யாஸம்முதலியன நடந்தால், தவறாமல் கேட்கப் போவார்.பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பிவருவார். வீட்டுக்கு வந்து உபந்யாஸிகளின் கொள்கைகளைஒரு மாதம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப்பார்."''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர்.இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்குவரப்போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாகவெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும்,காலக்ஷேபங்களும்நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர்சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டுஉலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக்கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம்,ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான்பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியாதேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாகஇருப்பார்களென்று தோன்றவில்லை? என்று நானாவிதமாக நம்தேசத்தாரின் அறிவு நிலைமையை தூஷணை செய்துகொண்டேயிருப்பார்.

மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும்கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில்பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில்கவிதை கூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும்உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது. இவருக்கு"சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனால் பாடத் தெரியாது.தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். பெரியபெரிய மிருதங்கக்காரரெல்லாம் இவரைக் கண்டால்பயப்படுவார்கள்.