அட்டு என்னும் திரிபும் அதன் மூலமான ஒட்டு என்பது போன்றே (அதே பொருளில்) துணைவினையாம். ஆயின், இது முன்னிலை யிடத்திற்குரிய உடன்பாட்டு ஏவல் வினையாகவே வரும். ஒட்டு என்பதோ மூவிடத்தும் பெரும்பான்மை எதிர்மறையிலும் சிறுபான்மை உடன்பாட்டிலும் வரும். எ - டு : அவன் வரட்டு = அவனை வரவிடு (ஒருமை) அவன் வரட்டும் = அவனை வரவிடும். (பன்மை) அவன் வரவொட்டேன் அவன் வரவொட்டோம் தன்மை அவன் வரவொட்டாய் அவன் வரவொட்டீர் முன்னிலை அவன் வரவொட்டான் அவன் வரவொட்டார் படர்க்கை அவன் வரவொட்டுவேன், அவன் வரவொட்டுவோம் என்பன உடன்பாடு. ஒல் - ஒ. ஒ. நோ : நல் - ந. பொல் - பொ. ந = நல்ல. எ - டு : நக்கீரன். பொத்தல் = துளைத்தல். ஒத்தல் = போலுதல், பொருந்துதல். ம.ஒ. ஒ - ஒக்க = ஒருசேல, போல, ம. ஒக்க. ஒ - ஒக்கல் = இனம், இனத்தார். ஒக்கல் - ஒக்கலி. ஒக்கலித்தால் = இனத்தாருடன் உறவாடுதல். ஒக்கல = பொருந்திய பக்கம், மருங்குல், இடுப்பு. ஒக்கல் - ஒக்கலை = இடுப்பு. ஒக்க (தெ.) = ஒரு. ஒக்க + இடு = ஒக்கிடு. ஒ - ஒத்து (வி.எ.) - ஒத்துக்கொள், ஒத்துக்கொடு. ஒ - ஒத்து - ஒத்தாசை. ஒ - ஒத்து - ஒத்திகை = ஒத்துப்பார்க்கும் நாடகப் பயிற்சி, ஒத்திகை - ஒத்திக்கை. ஒ - ஒப்பு - ஒப்பனை = உவமை, சமம், அழகு. ஒப்பு - ஒப்பம்.ம. ஒப்பம்,க.ஒப்ப. |