ஒப்பு - ஒப்பந்தம்தெ. ஒப்பந்தமு,க. ஒப்பந்த,து.ஒப்பந்த. ஒப்பு - ஒப்பாரி = ஒப்பு.க.ஒப்பாரி. ஒப்பு - ஒப்பிதம் = பொருத்தம்.தெ. ஒப்பிதமு. ஒப்பு - ஒப்படி = அறுவடை.தெ. ஒப்பிடி (obbidi). ஒப்பு - ஒப்பன் = மெருகிடப்பட்டது. “ஒப்பன் திருவடிக்காறை” (S.I.I. Vol. II, 7) ஒப்பு - ஒப்புரவு = உயர்ந்தோரோ டொத்தொழுகல். ஒப்பு - ஒப்புவி - ஒப்பி. ஒப்பு - ஒப்புவி - ஒப்பி. ஒப்பு - ஒப்புக்கொள், ஒப்புக்கொடு. ஒ - ஒம்பு. ஒம்புதல் = இசைதல், உளம்பொருந்துதல். ஒ - ஒவ்வு. ஒவ்வுதல் = ஒத்தல், பொருந்துதல். ஒ - ஓ - ஓவு = சித்திரம். “ஓவுறழ் நெடுஞ்சுவர்” (பதிற். 68 17) ஓவு - ஓவி = சித்திரம். “ஓவி நல்லார்” (திவ். பெரியதி. 2:8:7) ஓவு - ஓவம் = சித்திரம். “ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்” (பதிற். 88 28) ஓவு - ஓவியம் = சித்திரம். ஒட்டு - ஒடு - ஓடு. ஓடுதல் = ஒத்தல், பொருந்துதல். ஓடு - ஓடாள்வி - ஓடாவி = சித்திரக்காரன். ஓடு - ஓட்டம் = ஒப்பு. ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு. எ - டு : குரங்காட்டம் ஓடுகிறான். |